‘அதிகபட்ச ரன் 29’.. ‘பெருசா போகயிருந்த ஆர்சிபி மானத்தை காத்த சிஎஸ்கே வீரர்’.. யாரென்று தெரிகிறதா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Mar 23, 2019 10:02 PM
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் சுழலில் சிக்கி ராயல் சேலஞ்சர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசன் இன்று(23.03.2019) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. இதில் நடப்பு சேம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதகின்றன.
இதில் இந்திய அணியின் இரு முக்கிய வீரர்களான தோனியும், விராட் கோலியும் கேப்டன்களாக களமிறங்கிவதால் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று போட்டி தொடங்குவதற்கு முன்பாக புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களில் குடும்பங்களுக்கு ரூ. 20 கோடிக்கான காசோலையை பிசிசிஐ சார்பாக தோனி வழங்கினார். இதனை அடுத்து டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.
இதனை அடுத்து பேட்டிங்கில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆர்சிபி அணியின் கோலியும், பார்தீவ் பட்டேலும் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனைத் தொடர்ந்து வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்னில் அவுட்டாகி வெளியேற 17.1 ஓவரின் முடிவில் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் ஆர்சிபி இழந்தது. இதில் பார்தீவ் பட்டேல் அதிகபட்சமாக 29 ரன்கள் அடித்தார். இவர் இதற்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை அதிகபட்சமாக தாகிர் மற்றும் ஹர்பஜன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளனர்.
