‘மனைவிக்காக கணவரின் அரிய கண்டுபிடிப்பு’.. பாராட்டி விருது வழங்கிய குடியரசு தலைவர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 29, 2019 12:33 AM

உடல்நலம் சரியில்லாத தனது மனைவிக்காக ‘பெட் டாய்லெட்’ உருவாக்கிய கணவருக்கு குடியரசு தலைவர் விருது வழங்கி கவுரவித்த சம்பவம் நெகிழ்ச்சியடையவைத்துள்ளது.

A man wins National award for building toilet bed in Kanyakumari

கன்னியாகுமரியைச் சேர்ந்த சரவண முத்து என்பவர் அப்பகுதியில் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கடந்த 2014 -ம் ஆண்டு உடல்நலம் சரியில்லாததால் அறுவை சிகிச்சை ஒன்றை செய்துள்ளார். இதனை அடுத்து எழுந்து நடமாட முடியாமல் அவர் மிகவும் சிரமப்பட்டுள்ளார். இது சரவண முத்துவுக்கு மன உளச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் சரவண முத்து அவரது மனைவிக்காக பெட் டாய்லெட் என்னும் புதிய கட்டில் ஒன்றை கண்டிபிடித்துள்ளார். இதற்கு மின்சாரம் தேவையில்லை. பேட்டரியின் மூலம் இயங்கும் இந்த இயந்திரம் ரிமோட் மூலம் செயல்படுவதால், மற்றவரின் உதவியை எதிர்பார்க்க அவசியமில்லை என சரவண முத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சரவண முத்துவின் கண்டுபிடிப்புக்கு தேசிய கண்டுபிடிப்பு குழுவின் ,  ‘தேசிய புதுமை விருது’ வழங்கப்பட்டுள்ளது. இதனை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கியுள்ளார்

Tags : #KANYAKUMARI #BEDTOILET #PRESIDENTKOVIND