‘ஒளிமயமான எதிர்காலம்’ எம்ஜிஆர் பட பாடலா?.. பிரேமலதா கூறியது என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Mar 26, 2019 12:44 PM
தேமுதிக பொருளாளர் பிரேமலதா, அக்கட்சியின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி மும்முரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
முன்னதாக தேமுதிகவின் தேர்தல் அறிக்கைகள் பற்றி கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த பிரேமலதா, தேமுதிக 4 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவதால், கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கையினையே தாங்களும் பின் தொடருவதாகவும், தங்களுக்கு என்று தனியான தேர்தல் அறிக்கையினை இம்முறை அறிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.
அதற்கும் முன்னதான பத்திரிகை சந்திப்பொன்றில், கூட்டணி வைப்பதால் கட்சிக் கொள்கைகள், முடிவில் இருந்து நழுவுவதாக விமர்சிக்க முடியாது என்றும், ‘ஒரு மணப்பெண் இருந்தால் 10 பேர் கேட்டு வரத்தான் செய்வார்கள்’ என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் திருச்சியில் நேற்று நடந்த வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, விஜயகாந்துக்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் எப்போதும் எம்ஜிஆரின் ஒளிமயமான எதிர்காலம் பாடலைத்தான் விரும்பிப்பாடுவார் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் இந்த பாடல் எம்ஜிஆர் பாடல் அல்ல, சிவாஜி நடிப்பில் வெளியான பச்சை விளக்கு படத்தில் டி.எம்.சௌந்தர்ராஜன் குரலில் வெளியான பாடல் என்பதால், தவறுதலான தகவலை சொன்ன பிரேமலதாவை பலரும் விமர்சித்து வருகின்றனர்.