'நான் கிளம்புறேன்'...எல்லாரையும் நெகிழ வச்சிட்டாரே நம்ம 'தல'...வைரலாகும் புகைப்படம்!
முகப்பு > செய்திகள் > தமிழ்By Jeno | Mar 25, 2019 01:18 PM
12வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியை எதிர் கொண்டது. இதில் சென்னை 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து நாளை டில்லியில் நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோத இருக்கிறது.இதற்காக சென்னை அணி வீரர்கள் நேற்று டெல்லி கிளம்பி சென்றார்கள்.விமானநிலையம் வந்த வீரர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் வரவேற்பு கொடுத்தார்கள்.அப்போது தல தோனி செய்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்தது.
விமானநிலையத்தில் தோனியை காண்பதற்காக மாற்றுத் திறனாளி சிறுவன் ஒருவன் சக்கர நாற்காலியில் காத்து கொண்டிருந்தான்.அதை கவனித்த தோனி அந்த சிறுவனுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.இது அங்கிருந்த அனைவரையும் நெகிழ செய்தது.அந்த சிறுவனோடு தோனி எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Posing with a cute little Super Fan before leaving the #HomeSweetDen! 💛💛💛 #Yellove pic.twitter.com/txVb3tjzSl
— Chennai Super Kings (@ChennaiIPL) March 24, 2019
