‘கரும்பலகையில் காதல் ஃபார்முலா’.. மாணவிகள் எடுத்த ரகசிய வீடியோ.. வைரலான கணித ஆசிரியர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | Mar 22, 2019 04:44 PM

கல்லூரி மாணவிகளுக்கு காதல் குறித்த பாடம் எடுத்த கணக்கு ஆசிரியரின் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Maths teacher suspended after teaching students \'love formulae\'

கடந்த சில நாள்களுக்கு முன்பு ஹரியானாவில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் சரண் சிங் என்ற கணித பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாடம் நடத்திக் கொண்டு இருந்துள்ளார்.

அப்போது காதல் குறித்த சில ஃபார்முலாக்களை அறிமுகப்படுத்தி அதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார். அவர் பாடம் எடுப்பதை வகுப்பில் இருந்த மாணவி ஒருவர் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.

பின்னர் இந்த வீடியோ அவர் சமூக வலைதளங்களில் வெளியிடவே அது வைரலானது. இதனை அடுத்து வீடியோவைப் பார்த்த கல்லூரி நிர்வாகம் ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

கணித ஆசிரியர் சரண் சிங் நடத்திய காதல் ஃபார்முலாக்கள், நெருக்கம்–ஈர்ப்பு = நட்பு, நெருக்கம்+ஈர்ப்பு = காதல், ஈர்ப்பு–நெருக்கம் = ஆசை.

Tags : #TEACHER #LOVEFORMULAE #VIRALVIDEO