‘பும்ராவை போல் பந்து வீசி அசத்திய சிறுவன்’.. வைரலான வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 06, 2019 10:57 PM

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவைப் போல ஹாங்காங் சிறுவன் பந்து வீசும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Kid imitating Bumrah\'s bowling action in Hong Kong

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளாரான பும்ரா தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். இவர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நம்பர் ஒன் பந்து வீச்சாளராக வலம் வருகிறார்.

கடந்த 2018 ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பும்ரா இதுவரை 10 டெஸ்ட்களில் விளையாடி 49 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அறிமுக ஆண்டிலேயே டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சர்வதேச அளவில் முதல் வீரர் எனும் பெருமையை பும்ரா பெற்று சாதனைப் படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 -வது ஒருநாள் போட்டியில் பும்ரா சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலிய அணியின் முக்கிய இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் ஹாங்காங் நாட்டில் 13 வயதுக்குட்பட்டோருக்கான லீகில் விளையாடிய சிறுவன் பும்ராவைப் போல பந்துவீசி வருகிறார். பும்ராவைப் போல் பந்து வீசும் சிறுவனின் வீடியோவை ஹாங்காங் கிரிக்கெட் நிர்வாகம் தனது ட்விட்டர்  பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #TEAMINDIA #BUMRAH #INDVAUS #HONGKONG #KID #VIRALVIDEO