‘டியூசன் என்ற பெயரில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை’.. பரபரப்பை ஏற்படுத்திய ஆசிரியை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 21, 2019 10:13 PM

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுப்பதாக கூறி அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A Teacher in Thiruvannamalai sexually harassed her students

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த இந்திரா நகர் என்ற பகுதியைச் சேர்ந்த நித்யா என்பவருக்கு கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு உமேஷ் குமார் என்பவருடம் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில்  ஆரணி அருகே உள்ள பையூர் என்னும் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சில மாணவர்களுக்கு நித்யா பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக அவரது கணவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனை அடுத்து இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த கோரி குழந்தைகள் நல அலுவலருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நடத்திய விசாரணையில் பள்ளி மாணவர்களை டியூசன் என்ற பெயரில் வரவழைத்து அவர்களை நிர்வாணமாக நடனமாட வைத்து செல்ஃபி எடுத்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியை நித்யா மீது வழக்கு பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் போலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #THIRUVANNAMALAI #TEACHER #ABUSED #STUDENTS