“சும்மா ஸ்டைலா, கெத்தா”.. சென்னை வந்த நம்ம ‘தல’தோனி! ..‘தல பராக்’..வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 15, 2019 10:57 PM

ஐபிஎல் போட்டிகள் நடைபெற இருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி சென்னைக்கு வந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

IPL 2019, MS Dhoni and other two players came to chennai

ஐபில் டி20 தொடரின் 12 -வது சீசன் வரும் மார்ச் 23 -ஆம் தேதியில் இருந்த தொடங்க உள்ளது. முதல் டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.  இதில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதும் போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.  இந்நிலையில் இப்போட்டிகான டிக்கெட் விற்பனை நாளை(16.03.2019) தொடங்க உள்ளது.

மேலும் ஐபிஎல் போட்டிக்காக அனைத்து அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளன. இதனை அடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, கேதர் ஜாதவ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் சென்னைக்கு வந்த புகைப்படத்தை சி.எஸ்.கே அணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Tags : #THALAPARAAK #YELLOVEAGAIN #WHISTLEPODU 🦁💛 #IPL2019 #MSDHONI #VIRALVIDEO