மைதானமே அதிர்ந்த ‘தல’தோனி எடுத்த மின்னல் வேக ரன் அவுட்.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 08, 2019 06:30 PM

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3 -வது ஒருநாள் போட்டியில் தோனி எடுத்த மின்னல் வேக ஸ்டெம்பிங் இணையத்தில் வைரலாகி வருகிறது.

IND vs AUS : Dhoni and Jadeja combined to effect a stunning run out

இந்தியாவுக்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள ஆஸ்திரேலிய அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்கிற கணக்கில் வெற்றி பெற்று டி20 தொடரைக் கைப்பற்றியது. இதற்குபின் பெங்களூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2 -வது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதனை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 -வது ஒருநாள் போட்டி இன்று(08.03.2019) ராஞ்சில் நடைபெற உள்ளது. முன்னதாக இந்திய வீரர்களுக்கு ராஞ்சியில் உள்ள தனது வீட்டில் தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி விருந்து வைத்தனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3 -வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி இந்திய பௌலர்களை திணற வைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது குல்தீப் யாதவ் வீசிய 42 ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய வீரர் மார்ஷ் தூக்கி அடித்தார். அந்த பந்தை ஜடேஜா அருமையாக தடுத்து, விக்கெட் கீப்பர் தோனியிடம் எறிந்தார். உடனே தோனி பந்தைப் பிடிக்காமல் அப்படியே ஸ்டம்பிள் தட்டிவிட்டார். இதனை சற்றும் எதிர்பாராத மேக்ஸ்வெல் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தற்போது 314 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.

Tags : #INDVAUS #MSDHONI #JADEJA #MAXWELL #VIRALVIDEO