‘இன்னும் 7 நாள்கள்’.. ‘சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் அடிங்க’.. ‘தல’தோனியின் அட்டகாசமான வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 16, 2019 07:47 PM

வரவுள்ள ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை பரபரப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது டிவிட்டர் பக்கத்தில் வீரர்கள் இருக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

WATCH: Dhoni, Harbhajan Singh, Jadhav danced for CSK\'s team anthem

12 -வது சீசன் ஐபிஎல் டி20 போட்டிகள் கோலாகலமாக தொடங்கவுள்ளன.  முதல் ஐபிஎல் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதவுள்ளன.

இதற்கான டிக்கெட் விற்பனை இன்று(16.03.2019) சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. ரசிகர்கள் டிக்கெட் வாங்குவதற்காக அதிகாலை முதலே வரத்தொடங்கியுள்ளனர்.

மார்ச் 23 -ம் தேதி இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஐபிஎல் டி20 போட்டி நடைபெற உள்ளதால இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று சென்னை வந்த தோனி, கேதர் ஜாதவ், ஷர்துல் தாகூர் ஆகியோரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் விளம்பர பாடலான ‘சென்னை சூப்பர் கிங்ஸுக்கு  பெரிய விசில் அடிங்க’ என்ற பாடலுக்கு தோனி, ஹர்பஜன் சிங், கேதர் ஜாதவ், முரளி விஜய் ஆகியோர் உற்சாகமாக ஆடும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #IPL2019 #WHISTLEPODU 🦁 #YELLOVEAGAIN #CSK #MSDHONI #VIRALVIDEO