‘3 பந்துக்கு 10 ரன்கள்’.. 2 சிக்ஸர் அடித்து சேலஞ்சை முடித்த க்ருனல் பாண்ட்யா.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Mar 15, 2019 07:21 PM
ஐபிஎல் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தின் போது மும்பை இந்தியன்ஸ் வீரர் க்ருனல் பாண்ட்யா 2 சிக்ஸர்கள் அடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
![WATCH: Krunal Pandya was on fire in the Mumbai Indians nets WATCH: Krunal Pandya was on fire in the Mumbai Indians nets](http://tamil.behindwoods.com/news-shots/images/sports-news/watch-krunal-pandya-was-on-fire-in-the-mumbai-indians-nets.jpg)
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 12 -வது சீசன் தொடர்பான கிரிக்கெட் வீரர்களின் விளம்பர வீடியோக்கள் தினமும் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஐபிஎல் போட்டிக்கான ரசிகர்கள் உலகளவில் பரவி இருக்கின்றனர்.
கடந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் இரண்டு வருட தடைக்கு பிறகு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை கைப்பற்றியது. இதுவரை நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தலா 3 கோப்பைகளை வென்றுள்ளன.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, க்ருனல் பாண்ட்யா, பும்ரா என இந்திய அணியின் முன்னணி வீரர்கள் உள்ளனர். ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது இக்கட்டான நேரங்களில் விளையாடுவது குறித்து பயிற்சி மேற்கொள்ளப்பட்டு இருந்தது. அதில் க்ருனல் பாண்ட்யாவுக்கு 3 பந்துகளில் 10 ரன்கள் அடிக்க வேண்டும் என்கிற இலக்கு கொடுக்கப்பட்டது. முதல் பந்தை வீணடித்த க்ருனல் பாண்ட்யா, அடுத்த 2 பந்துகளில் தொடர்ந்து 2 சிக்ஸர்களை அடித்து அசத்தினார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)