'காதல்' திருமணம் செய்த பெண் குத்திக்கொலை... 'கணவர்' உட்பட 2 பேர் கைது!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியை சேர்ந்தவர் வீரமணிகண்டன் (28). அதே பகுதியை சேர்ந்தவர் பவித்ரா (23). வீரமணிகண்டனும், பவித்ராவும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகனும், கைக்குழந்தையும் உள்ளது. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பவித்ரா தன்னுடைய பெற்றோர்களுடன் வசித்து வந்தார்.

தன்னுடைய குழந்தையை தருமாறு வீரமணிகண்டன் அடிக்கடி பவித்ராவிடம் கேட்டு தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வீரமணிகண்டன் தன்னுடைய நண்பர் ராம்குமார் என்பவருடன் பவித்ரா வீட்டுக்கு சென்று உள்ளார். தன்னுடைய குழந்தையை கொடுக்குமாறு தகராறு செய்துள்ளார். வாய்த்தகராறு முற்றியதில் வீரமணிகண்டன் ஆத்திரம் அடைந்து அருகில் நின்று கொண்டிருந்த பவித்ராவை கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் பவித்ரா மயங்கி விழுந்தார்.
மேலும் பவித்ராவின் அப்பா சாஸ்தாமூர்த்தி, அவருடைய மனைவி அமுதா (45) மற்றும் பவித்ராவின் பாட்டி சித்தம்மாள் (70) ஆகியோரையும் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு 9 மாத கைக்குழந்தையை வீரமணிகண்டன் மற்றும் ராம்குமார் ஆகியோர் தூக்கி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கத்தியால் குத்தப்பட்டு, காயம் அடைந்து கிடந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பவித்ராவை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்
