'புகையிலை வாங்க போன பாட்டி...' 75 வயது என்றும் பாராமல்...' 'சீரழித்த இளைஞர்கள்...' - மகனுக்கு உடந்தையாக இருந்த தாயும் கைது...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலத்தில் 75 வயது மதிக்கத்தக்க பாட்டியை பாலியல் வன்கொடுமைக்குக்கு ஆளாக்கிய வழக்கில் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் கோலஞ்சேரி பாங்கோடு பகுதியில் 75 வயது மூதாட்டி ஒருவர் தீடிரென ஏற்பட்ட ரத்த போக்கு காரணமாக மயங்கி விழ, கோலஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். மேலும் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு, பாட்டி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உள்ளதாகவும், அவரின் சிறுநீர்ப்பை மற்றும் குடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணையை தொடங்கிய போது, பாட்டியின் குடும்பத்தார் சில தகவல்களை அளித்தனர். அதில், அவர் புகையிலை வாங்க பக்கத்துக்கு வீட்டுக்கு சென்றபோது தான் இப்படி நடந்துள்ளது என தெரிவித்துள்ளனர். மேலும் பாட்டி புகையிலை வாங்க சென்ற 66 வயதான ஓமனா என்பவரின் வீட்டில் விசாரித்த போது பாதிக்கப்பட்ட பாட்டி புகையிலை கேட்டு வீட்டிற்குள் நுழையும் போது கீழே விழுந்துவிட்டார் எனவும், அவருக்கு மனநிலை சரி இல்லை என பல்வேறு மழுப்பல் பதில்களை சொல்லியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த கேரள காவல்துறையினர் 66 வயது ஒமனாவையும், அவரது குடும்பத்தாரையும் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரித்ததில் பல அதிர்ச்சிகர சம்பவங்கள் வெளியாகியுள்ளன.
விசாரணையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதிக்கப்பட்ட பக்கத்து வீட்டு பாட்டி புகையிலை வாங்க வந்ததாகவும், அப்போது அவருக்கு புகையிலை மற்றும் தேநீர் கொடுத்து அமர வைத்ததாக தெரிவித்துள்ளனர். அப்போது குடிபோதையில் இருந்த அவரது மகன் மனோஜ் அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக தெரிவித்தார். மேலும் மகனின் நண்பர் முகமது ஷாஃபி என்பவரும் இந்த குற்ற செயலில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ளார். தற்போது ஓமனா, அவரது மகன் மனோஜ் மற்றும் முகமது ஷாஃபி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட இருவரும் 75 மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கூரிய ஆயுதங்கள் கொண்டு பாட்டியின் உறுப்புகளை தாக்கியுள்ளனர். தற்போது 75 வயது பாட்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூர சம்பவத்திற்கு கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலஜா வருத்தம் தெரிவித்ததோடு, குற்றவாளிகள் மீது பலத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கேரள மகளிர் ஆணையத் தலைவர் எம் சி ஜோசபின், மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அந்த பெண்ணின் சிகிச்சைக்கான செலவுகளை ஏற்குமாறு வலியுறுத்தினார். இதனையடுத்து கே.கே.ஷைலாஜா, கண்டிப்பாக மருத்துவ செலவுகளை கேரள அரசாங்கம் ஏற்கும் என உறுதிபட கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
