வீட்டில் காதலனுடன் தனியாக இருந்த 'இளம்பெண்'... 'ரூம்' லாக் பண்ணிட்டு 'பொண்ண' பெத்தவங்களே,,.. 'உ.பி' மாநிலத்தையே 'நடுங்க' வைத்த 'கொடூரம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலம் பந்திரா மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தனது காதலனுடன் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

தங்களது மகள் காதலனுடன் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட இளம்பெண்ணின் பெற்றோர்கள், மகளின் செயலை எண்ணி கடும் கோபமடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, குடும்பத்தினர் சிலருடன் சேர்ந்து, மகள் மற்றும் காதலன் இருந்த குடிசையை அடைத்து பூட்டி விட்டு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டனர். சிறிது நேரத்தில், குடிசை முழுவதும் தீ பிடித்து எரிந்த நிலையில், காதலர்கள் இருவரும் அலறித் துடித்துள்ளனர். இறுதியில் அவர்களின் அலறல் சத்தமும் நின்ற நிலையில் அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அந்த இளைஞர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். 80 சதவீத காயங்களுடன் இளம்பெண் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில், அவரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார். இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, இளம்பெண்ணின் குடும்பத்தினர் 9 பேர் மீது FIR வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்று பேரை கைது செய்துள்ள நிலையில், மீதமுள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தங்களது மகள், காதலனுடன் தனியாக இருந்த காரணத்திற்காக கோபத்தில் பெண்ணின் பெற்றோர்களே தீ வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
