பாதி எரிந்த நிலையில் கிடந்த 'மூதாட்டி' உடல்... 'சிசிடிவி'ய செக் பண்ணி பாத்ததுல... மிரண்டு போன போலீஸ் அதிகாரிகள்... குலை 'நடுங்க' வைக்கும் 'கொடூரம்'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த குண்டாறு கரையில், சில தினங்களுக்கு முன் எரிந்து கொண்டிருந்த நிலையில், மூதாட்டி உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
![madurai body of half burned old woman found police get shocked madurai body of half burned old woman found police get shocked](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/madurai-body-of-half-burned-old-woman-found-police-get-shocked-1.jpg)
முன்னதாக அப்பகுதியில் பெரும் புகையும், துர்நாற்றமும் வீசியதால் அங்குள்ள மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு வந்த போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டனர். முதற்கட்டமாக, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அவ்வழியே சென்ற ட்ரை சைக்கிள் ஒன்றின் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அந்த வண்டியை தள்ளிக் கொண்டு வந்த மூன்று பேர் யார் என போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
திருமங்கலம் பசும்பொன் நகர் பகுதியில் வசித்த பழனியம்மாள், அவரது மகன் மருமகன் என அடையாளம் காணப்பட்டது. அவர்கள் தற்போது அந்த வீட்டை காலி செய்து விட்டு வேறு வீட்டிற்கு வாடகைக்கு சென்றுள்ளனர். பழனியம்மாள் குடும்பத்தாரிடம் சந்தேகத்தின் பெயரில் போலீசார் விசாரித்த போது, பாதி நிலையில் எரிந்து கிடந்த மூதாட்டி 75 வயதான கருப்பாயி என்பது தெரிய வந்தது.
முன்னதாக, கருப்பாயி அம்மாளின் இளைய மகளான பழனியம்மாளுடன் தங்களது சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். குடும்ப சூழல் காரணமாக சொத்தை விற்று பசும்பொன் நகர் பகுதியிலுள்ள வீட்டில் வாடகைக்கு சென்றுள்ளனர். கொரோனா காரணமாக, பழனியம்மாள் மற்றும் குடும்பத்தினர் வீடு வாடகை கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த நிலையில், மூதாட்டி கருப்பாயி அம்மாளின் உடல்நிலையும் மோசமாக இருந்துள்ளது.
இதனால் அந்த வீட்டின் உரிமையாளர் வீட்டை காலி செய்ய தொடர்ந்து நிர்பந்தித்துள்ளார். மூதாட்டியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு வேறு இடங்களில் யாரும் வீடு கொடுக்க முன் வரவில்லை. வீடு வாடகைக்கு கிடைக்காத காரணத்தால், பழனியம்மாள் மற்றும் அவரது மகன் உட்பட நான்கு பேர் இணைந்து கருப்பாயி அம்மாளை கொலை செய்து எரித்துள்ளனர்.
வாடகை வீட்டுக்காக மூதாட்டியை அவரது மகளே குடும்பத்தாருடன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)