ஆச ஆசையா,, 'தம்பி'ங்களுக்கு 'ராக்கி' கயறு கட்டி விட்ட 'அக்கா'... அடுத்த 'நிமிஷமே' இப்டி நடக்கும்ன்னு நினைக்கல... பகீர் கிளப்பிய 'சகோதரர்கள்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத் மாநிலம் அகமதாம்பாத் பகுதியை சேர்ந்தவர் சஜிஜூல் ஷேக் மற்றும் ரோஜோஅலி ஷேக். உடன்பிறப்புகளான இவர்களின் மூத்த சகோதரி பெயர் மிரா.

கடந்த சில தினங்களுக்கு முன் சஜிஜூல் மற்றும் ரோஜோஅலி ஆகியோர் ரக்ஷாபந்தன் தினத்தன்று தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது இளைய சகோதரர்கள் இருவரின் கைகளிலும் சகோதரி மிரா ராக்கி கயிறு கட்டியுள்ளார். தொடர்ந்து, சகோதரர்களுக்கு வேண்டி டீ போட்டுக் கொண்டு வந்த நிலையில் அதனைக் குடித்த சகோதரர்கள் தொடர்ந்து சகோதரியை தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்திக் கொலை செய்துள்ளனர்.
தொடர்ந்து, அங்குள்ள அலமாரியில் இருந்த சுமார் ஆறு லட்சம் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சகோதரி வீட்டிற்கு செல்வதற்கு முன்னரே இருவரும் சேர்ந்து சகோதரியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். சஜிஜூல் விவாகரத்துக்கு அவரது சகோதரி தான் காரணம் என மிரா மீது சஜிஜூல் கோபத்தில் இருந்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய சகோதரனுடன் இணைந்து திட்டம் தீட்டி அதன்படி ரக்ஷபந்தன் தினத்தன்று சகோதரி வீட்டிற்கு சென்று திட்டமிட்டபடி கொலை செய்துள்ள தகவல் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

மற்ற செய்திகள்
