'புல்லட் வேஸ்ட் ஆகுதுயா...' ஏன் எதுக்கெடுத்தாலும் இப்படி பொசுக்குன்னு சுடுறீங்க...? பேசாம வீட்டுக்கு போய் 'அத' பண்ணுங்க...! - தாலிபான்களுக்கு அறிவுரை...!
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபான்கள் பஞ்ஷிர் மாகாணத்தைக் கைப்பற்றிய வெற்றிக் கொண்டாட்டத்தில் துப்பாக்கியால் சுட்டப்போது 17 அப்பாவி பொதுமக்கள் இறந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான் கைப்பற்றிய நிலையில் அந்நாட்டில் இருக்கும் பஞ்ஷிர் மாகாணம் மட்டும் அவர்களின் பிடியில் சிக்காமல் இருந்தது. இந்நிலையில் தற்போது பஞ்ஷிர் மாகாணத்தையும் கைப்பற்றிவிட்டதாக தாலிபான்கள் கூறியுள்ளனர்.
இதன்காரணமாக, தங்கள் வெற்றியை தாலிபான் அமைப்பு கொண்டாடும் போது பொதுமக்கள் 17 பேர் பலியாகியதாக செய்தி வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பு தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாகீத், 'நம்முடைய வெற்றிக்காக யாரும் வானத்தை நோக்கிச் சுட வேண்டாம். சில சமயங்களில், தோட்டாக்கள் அப்பாவி பொதுமக்கள் மீது பாய்ந்து அவர்களின் உயிரைப் பறித்துவிடும். எனவே, தோட்டாக்களை வீணடிக்காமல் நம்முடைய பஞ்ஷிர் மாகாணம் வெற்றிக்காக கடவுளுக்கு நன்றி மட்டும் சொல்லுங்கள்' எனக் கூறியிருந்தார்.
ஆனால், நங்கர்ஹார் மாகாணத்தில் நடத்திய வெற்றிக் கொண்டாட்டத்தில் துப்பாக்கிக் குண்டுகள் வானத்தை நோக்கி வெடிக்கப்பட்டதில் 17 அப்பாவி பொதுமக்கள் இறந்ததாக டோலோ செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியது.
சுமார் 1990-களில் தாலிபான்கள் ஆதிக்க சக்தியாக இருந்தபோதே அவர்களால் பஞ்ஷிரை நெருங்க முடியவில்லை. இப்போது தாலிபான்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு பஞ்ஷிரை கைப்பற்றிய நிலையில் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவுகிறது.