நீங்க 'திருந்தினது' உண்மையா...? கிடுக்குப்பிடி கேள்விகளால் 'தாலிபானை' அலற விட்ட பெண் பத்திரிக்கையாளர்...! - தற்போது வெளிவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் தகவல்...!
முகப்பு > செய்திகள் > உலகம்கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு டோலோ என்ற தனியார் சேனலில் பெண் பத்திரிக்கையாளராக வேலை செய்தவர் பேஹஸ்டா அர்கான்ட். இவர் பணிக்கு சேர்ந்த சில மாதங்களிலேயே தாலிபானின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான மவுலவி அப்துல்லாஹ் ஹேமத்தை கடந்த 17-ம் தேதி நேர்காணல் செய்தார்.
அதன் பின், தாலிபான்கள் தீவிரமாக ஆப்கானிஸ்தானை கைப்பற்ற ஆரம்பித்தன. அதோடு, பெண்களை மிக மட்டமாக நடத்தும் தாலிபான் அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவரை சரிக்கு சமமாக ஒரு பெண் பத்திரிக்கையாளர் நேர்காணல் செய்தது உலகளவில் வைரலானது.
அந்த நேர்காணலில் பேஹஸ்டா அர்கான்ட், 'உங்களுடைய பழைய ஆட்சி போல இம்முறையும் வீட்டுக்கு வீ்ட்டு சோதனை செய்யும் திட்டம் ஏதும் இருக்கிறதா?' என துணிச்சலுடன் பல கேள்விகளை கேட்டார்.
இப்போது ஆப்கானை தாலிபான்கள் முழுவதுமாக கைப்பற்றிய நிலையில், இனிமேல் பெண் பத்திரிகையாளர்களுக்கு சுதந்திரம் இருக்காது, உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதை உணர்ந்த பஷேஸ்டா அர்கான்ட் ஆப்கானிலிருந்து வெளியேறியுள்ளார்.
பஷேஸ்டா அர்காணட் ஆப்கானிஸ்தனை விட்டு வெளியேறிய செய்தியை சிஎன்என் சேனல் உறுதி செய்துள்ளது. இதுகுறித்து கூறிய அர்கான்ட், 'ஆப்கானில் தாலிபான் ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு சூழல் மேம்பட்டால் நான் மீண்டும் என் தாய் நாட்டிற்கு திரும்புவேன். நான் இப்போது வெளியேறியதற்கு காரணம் தாலிபான்' எனத் தெரிவித்தார்.
டோலோ சேனலின் நிர்வாக அதிகாரி சாத் மோஷேனி இதுகுறித்து கூறுகையில், இப்போது பெரும்பாலான புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள், நிருபர்கள் ஆப்கானை விட்டு தாலிபான்களுக்கு அஞ்சி வெளியேறி விட்டார்கள்.
தற்போது நாங்கள் புதிய பத்திரிக்கையாளர்களை நியமித்து வருகிறோம். அர்கான்ட் தாலிபான் தலைவரை நேர்காணல் செய்தது வரலாற்றுச் சிறப்பு. அதுமட்டுமல்லாமல் மலாலா யூசுப்பாயியையும் அர்கான்ட் இதற்கு முன் நேர்காணல் செய்தும் எங்களுக்கு பெருமை' என தெரிவித்தார்.