வெற்றி கொண்டாட்டத்தின் போது... எதிர்பாராத அசம்பாவிதம்!.. நிலைகுலைந்து போன தாலிபான்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்தாலிபான்களின் வெற்றி கொண்டாட்டத்தின் இறுதியில் எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்கானிலிருந்த அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறிய நிலையில் ஆப்கானை முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டிற்குள் தாலிபான்கள் கொண்டு வந்துள்ளார்கள்.
இதனால் தாலிபான்கள் எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளனர். தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், சாலைகளில் ஊர்வலமாக சென்றனர். அப்போது, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
மேலும், காபூல் நகரில் வெற்றியை கொண்டாடும் விதமாக கார்களில் வரிசையாக சுமார் 313 தாலிபான்கள் பயணம் செய்தனர். அதில் சிலர் இராணுவ சீருடையிலும், சிலர் சாதாரண உடைகளையும் அணிந்திருந்தனர்.
அப்போது காரின் வேகம் திடீரென்று அதிகரித்தபோது எதிர்பாராதவிதமாக இரண்டு தாலிபான்கள் வாகனத்திலிருந்து கீழே சட்டென்று விழுந்தனர். அவர்கள் வலியால் கத்தியதோடு நீண்ட நேரம் அப்படியே அமர்ந்திருந்தனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் அமைதி நிலவியது. அதன் பிறகு அனைவரும் காரில் அமர்ந்து மீண்டும் புறப்பட்டனர். இதற்கிடையே, அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆபத்து நிறைந்த ஆயுதங்களை ஆப்கானில் விட்டு சென்றுள்ளதும், அவை தாலிபான்களின் கையில் கிடைத்துள்ளதும், உலக நாடுகளை கவலை அடைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
