'இப்போ நல்லா குளுகுளுன்னு தான் இருக்கும்'... 'இனிமேல் தாலிபான்களுக்கு தூக்கமே வராது, அப்படி ஒரு பிரச்சனை வர போகுது'... மரணபயத்தை காட்டியுள்ள சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தாலிபான்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்துள்ளனர். அங்கிருந்த அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக வெளியேறிய நிலையில், எப்போது வேண்டுமென்றாலும் அதிபர், மந்திரி சபைகளை அமைக்க தாலிபான்கள் தயாராகி வருகின்றனர்.
ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய மகிழ்ச்சியில் தாலிபான் வீரர்கள், கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் சாலைகளில் மகிழ்ச்சியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்கள். அங்கு நிச்சயமற்ற சூழ்நிலை நிலவுவதால் பெரும்பாலான நாடுகள் தங்களது உதவிகளை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் இனிமேல் தான் பெரும் பிரச்சனையைச் சந்திக்க உள்ளது என ஐநா எச்சரித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் கடந்த சில நாட்களாக உணவு விலை 50 சதவீதம் அளவிற்கும், பெட்ரோல் விலை 75 சதவீதம் அளவிற்கும் அதிகரித்துள்ளது. பெரும்பாலான சர்வதேச உதவிகள் நிறுத்தப்பட்ட நிலையில், அரசு சேவைகள் செயல்பட முடியாது. அரசு ஊழியர்கள் சம்பளம் பெற முடியாது. இப்படியே சென்றால் இன்னும் ஒரு மாதத்திற்குள் உணவு பற்றாக்குறை ஏற்படும்.
மூன்றில் ஒருவர் பசியால் வாடும் நிலை ஏற்படும் என ஆப்கானிஸ்தானின் ஐ.நா.வுக்கான மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் ரமீஸ் அலாக்பரோவ் கவலை தெரிவித்துள்ளார். நேற்று, கந்தகார் பகுதியில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் தாலிபான்கள் அணி வகுப்பு நடத்தியுள்ளனர். விமானங்களை இயக்க அனுபவம் வாய்ந்த விமானிகள் இல்லாத நிலையில், கத்தார் ஏர்வைஸ் விமானம், தங்களுடைய விமானிகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.

மற்ற செய்திகள்
