'விட்டுட்டு போகுற வயசா இது'... 'கலங்கிய ரசிகர்கள்'... நடிகர் சித்தார்த் சுக்லா மரணத்தில் புதிய திருப்பம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Sep 04, 2021 01:38 PM

இந்தி சின்னத்திரையுலகில் பிரபல நடிகராகத் திகழ்ந்து வந்த சித்தார்த் சுக்லாவின் மரணம் மொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Actor Sidharth Shukla’s viscera sent to lab for further probe

இந்தி சின்னத்திரையுலகில் பிரபல நடிகராகத் திகழ்ந்து வந்தவர் சித்தார்த் சுக்லா. இவர்  நேற்று முன்தினம் திடீரென மரணம் அடைந்தார். 40 வயதே ஆன இவரது மரணம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உடற்பயிற்சியில் பெரிதும் ஆர்வம் கொண்ட சித்தார்த், தனது உடலை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருந்த நிலையில் அவரின் திடீர் மரணம் ரசிகர்களைப் பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Actor Sidharth Shukla’s viscera sent to lab for further probe

பிரேதப் பரிசோதனை அறிக்கையில் இயற்கைக்கு மாறான மரணத்திற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. மாரடைப்பு அவருக்கு மரணத்துக்கு வழிவகுத்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் நேற்று ஒஷிவாரா சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இதில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Actor Sidharth Shukla’s viscera sent to lab for further probe

இந்நிலையில் சுக்லா மரணத்தில் திடீர் திருப்பமாக அவரின் உள் உறுப்பு மாதிரிகள் மும்பையில் உள்ள கலினா தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும் சில உறுப்பு மாதிரிகள் மருத்துவக் கல்லூரியின் நோயியல் ஆய்வகத்திற்குப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. பரிசோதனை அறிக்கை வந்த பின்பே அவரின் மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Actor Sidharth Shukla’s viscera sent to lab for further probe | India News.