தயவு செஞ்சு தாலிபான்களுக்கு 'சப்போர்ட்' பண்ணாதீங்கையா...! பழங்காலத்துக்கு போய் 'காட்டுமிராண்டி' போல வாழ போறீங்களா...? - கடுமையாக சாடிய 'பிரபல' நடிகர்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை இந்திய முஸ்லீம்களில் ஒருசிலர் கொண்டாடுவது ஆபத்தானது என பிரபல பாலிவுட் நடிகர் கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி இருக்கும் தாலிபான் ஒரு பழைய, அடிப்படைவாத இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றும் அமைப்பு. இதன் கொடூர ஆட்சியை மக்கள் ஏற்கனவே உணர்ந்ததால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வெவ்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால், இந்தியாவில் சிலர் தாலிபான்களின் வெற்றியை கொண்டாடும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பிரபல பாலிவுட் நடிகர் நசீருதின் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், 'ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை கைப்பற்றிய நிகழ்வு உலகையே கவலையடைய செய்துள்ளது. நிலைமை இப்படி இருக்கும் போது இந்தக் காட்டுமிராண்டிகளின் வெற்றியை இந்திய முஸ்லிம்களில் ஒரு சிலர் கொண்டாடுவது மிகவும் ஆபத்தானது.
இந்தியாவில் பின்பற்றப்படும் இஸ்லாம் மதத்துக்கும், உலகின் பல்வேறு நாடுகளில் பின்பற்றப்படும் இஸ்லாம் மதத்துக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. நாம் நமது மதத்தை சீர்படுத்த வேண்டுமா? அல்லது பழமையான காட்டுமிராண்டி தனத்துடன் வாழ வேண்டுமா? என்று நாம் தான் சிந்திக்க வேண்டும்' என அந்த வீடியோ பதிவில் குறிப்பிடுள்ளார்.