'அமெரிக்கா விட்டுட்டு போன... எல்லா ராணுவ ஐட்டங்களையும் வெளிய எடுங்க டா'!.. தாலிபான்கள் 'அத' வச்சு என்ன பண்றாங்க தெரியுமா?
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா விட்டுச் சென்ற இராணுவ வாகனங்களை கைப்பற்றி தாலிபான்கள் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய போதும், கடந்த 31ம் தேதி வரை அமெரிக்க படை வெளியேற அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
இதன் காரணமாக ஆப்கானிஸ்தானில் இருந்த வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் மக்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்படோர் வெளியேறியுள்ளனர். இதையடுத்து தற்போது அமெரிக்க படைகள் முற்றிலும் வெளியேறிவிட்டதால், ஆப்கானிஸ்தான் முழுவதையும் தாலிபான்கள் தற்போது தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
ராணுவப் படைகள் அனைத்தையும் விலக்கி கொண்ட அமெரிக்கா இராணுவம், ஏராளமான விமானங்கள், ஆயுதங்கள், நவீன கருவிகளை காபூல், கந்தஹார் உள்ளிட்ட இடங்களில் விட்டு சென்றுள்ளது.
இந்நிலையில், கந்தஹாரில் அமெரிக்கா விட்டுச்சென்ற நூற்றுக்கணக்கான ANA -ஹம்வீ (Humvee) வகை இராணுவ வாகனங்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகளை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
அமெரிக்காவின் கைப்பற்றப்பட்ட இராணுவ வாகனங்களை கொண்டு கந்தஹாரில் தாலிபான்கள் அணிவகுப்பு ஒன்றியும் நடத்திய சம்பவம் தான் தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், காபூல் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள விமான போக்குவரத்தை சீரமைக்க தாலிபான்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதற்காக கத்தார் அரசின் உதவியை அவர்கள் நாடி உள்ளனர். தாலிபான்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட கத்தார் அரசு, விமானப் போக்குவரத்து தொடர்பான தொழில்நுட்ப குழு ஒன்றை தனி விமானம் மூலம் காபூலுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்ற செய்திகள்
