'பால் வாங்க காலையில் கதவை திறந்த பெண்'... 'சப்த நாடியையும் அடங்க வைத்த காட்சி'... 'இனிமேல் ஒவ்வொரு வீட்டிலும் இத பாப்பீங்க'... அலறவைத்த தாலிபான்கள்!
முகப்பு > செய்திகள் > உலகம்இனிமேல் ஒவ்வொரு காலைப் பொழுதும் எப்படி விடியப்போகிறது என்பது தான் ஆப்கான் மக்களின் பெரும் கவலையாக உள்ளது.

ஆப்கானிலிருந்த அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியான நிலையில், ஆப்கானை முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டிற்குள் தாலிபான்கள் கொண்டு வந்துள்ளார்கள். நேற்று ஆப்கானிலிருந்த கடைசி ராணுவ வீரரும் ஆப்கானை விட்டு வெளியேறினார். இதனால் உலகத்தோடு இருந்த தொடர்பை ஆப்கான் இழந்து விட்டதாகப் பலரும் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்கள்.
இந்நிலையில் தங்களின் காலைப் பொழுதை இனிமேல் பயத்துடன் தான் ஆரம்பிக்க வேண்டும் என்ற சூழ்நிலை ஆப்கான் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. சொந்த நாட்டுக்கு எதிராக வெளிநாட்டு ராணுவத்துடன் இணைந்து செயல்பட்டவர்கள் கண்டிப்பாக நீதி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனவும், விசாரணையில் குற்றம் நிரூபணமானால் மரண தண்டனை தான் எனவும் தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அந்தவகையில் நேற்று காலை பெண் ஒருவர் அதிகாலையில் தனது வீட்டின் கதவைத் திறந்துள்ளார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறையச் செய்தது. ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகளுக்கு உதவி செய்தவர்கள் வேட்டையாடப்படுவார்கள் என அந்த மரண எச்சரிக்கை அடங்கிய கடிதம் வீட்டு வாசலில் கிடந்துள்ளது. அந்த பெண்ணின் கணவர் ஒரு கட்டுமான நிறுவனம் ஒன்றை வைத்துள்ளார்.
அந்த கட்டுமான நிறுவனம் அமெரிக்கப் பிரிட்டிஷ் மற்றும் ஆப்கான் படைகளுக்குப் பல உதவிகளைச் செய்துள்ளது. இதுகுறித்து பேசிய அவர், ''தாலிபான்களின் நீதி விசாரணைக்குச் சென்றால் கண்டிப்பாகத் தண்டிக்கப் படுவோம். ஆனால், தாலிபான்களின் விசாரணையை எதிர்கொள்ளாமல் தவிர்த்தால் அது எனது மரணத்திற்குக் காரணமாக அமையும்'' என்றார்.
இதனிடையே, இங்கிலாந்து நிர்வாகம் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையில் தம்மையும் மீட்டுச் செல்ல அவர் பதிவு செய்ததாகவும், ஆனால் இங்கிலாந்து நிராகரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
