ஃபேஸ்புக்கில் பழகிய நபர்!.. நம்பி வாட்ஸ் ஆப் நம்பரை பகிர்ந்த இளம் பெண்ணுக்கு அடுத்த நொடியே காத்திருந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஃபேஸ்புக் மூலம் பழகிய நர்ஸ் பெண்ணின் போட்டோக்களை ஆபாசமாக மார்பிங் இளைஞர் ஒருவர் மிரட்டி சிக்கியுள்ளார்.

வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநர் சரத்குமார் (21) என்பவருக்கும் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும் ஓராண்டுக்கு முன்னர் ஃபேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. ஹைதராபாத்திலுள்ள மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்து வரும் அப்பெண், பக்கத்து ஊர்க்காரர் என நம்பி, சரத்குமாரின் பேச்சை நம்பி, வாட்ஸ்ஆப் நம்பரையும் பகிர, தன்னுடைய சொந்த கிராமத்துக்கு அந்த நர்ஸ் பெண் வந்திருப்பது தெரிந்ததும், சரத்குமார், அப்பெண்ணுக்கு வாட்ஸ் ஆப்பில் ஆபாசமான பதிவுகளைப் பதிவிட்டு, உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார்.
இதனால் அதிர்ந்த அந்த நர்ஸ் பெண், சரத்குமாரை எச்சரித்ததுடன், தொடர்பையும் நிறுத்திக் கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சரத்குமார், அந்த நர்ஸ் பெண்ணின் போட்டோவை ஃபேஸ்புக்கிலிருந்து எடுத்து ஆபாசமாக மார்பிங் செய்து அப்பெண்ணின் வாட்ஸ்ஆப்பிற்கு அனுப்பியுள்ளார்.
அப்போது அந்த போட்டோக்களை சமூக ஊடகங்களில் பகிராமல் இருக்க 2 லட்ச ரூபாய் பணம் கேட்டு சரத்குமார் மிரட்டியதாகவும் , இதனால் அச்சமடைந்த அந்த நர்ஸ், தன் பெற்றோரிடம் கூறி அழுததுடன், குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து சரத்குமாரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
