"அவர் ஆடினாலே... ஸ்டேடியம் பக்கம் கொஞ்சம் பாத்துதான் போகணும்...!!!" - '360 டிகிரியிலும் தெறிக்கவிட்ட அதிரடி வீரர்'... 'ஓடும் காரை பதம் பார்த்த சிக்ஸர்!!!'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

நேற்று முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. அதில் கடைசி 5 ஓவர்களில் மட்டுமே 83 ரன்கள் எடுக்கப்பட்டது. இதையடுத்து 195 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தால், 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 112 ரன்களே எடுத்து தோல்வியடைந்தது.
இதனால் பெங்களூரு அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், அந்த அணியின் டிவில்லியர்ஸ் 33 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து அசத்தினார். வலுவான கொல்கத்தா பவுலிங்கையும் மைதானம் நெடுக சிதறடித்து 360 டிகிரி சுழன்று சுழன்று விளாசிய டிவில்லியர்ஸ் 5 பவுண்டரிகளும், 6 சிக்ஸ்கள் அடித்து நொறுக்கினார். இதைத்தொடர்ந்து நேற்றைய போட்டியில் அவருடைய அபாரமான ஆட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டு வரும் நிலையில், அவர் சிக்ஸ் அடித்த வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.
கமலேஷ் நாகர்கோட்டி வீசிய 16வது ஓவரில் 2 சிக்ஸ்களை அடுத்தடுத்து ஏபிடி தெறிக்கவிட, அவை இரண்டும் மைதானத்திற்கு வெளியே பந்து சென்றன. அதில் ஒரு சிக்ஸர் மைதானத்தை ஒட்டி அமைந்திருந்த சாலையில் சென்று கொண்டிருந்த காரைப் பதம் பார்த்துள்ளது. இதனால் அங்கு வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மீண்டும் சீரானதும் நடந்துள்ளது.
— Simran (@CowCorner9) October 12, 2020

மற்ற செய்திகள்
