”யாரு சாமி இவன்?”.. ‘ஆன்லைனின் ஆர்டர்!’.. வீட்டுக்கு வந்த டெலிவரி பாய் கூறிய அதிர வைக்கும் தகவல்!.. போலீஸ் ஸ்டேஷன் சென்ற பின் கஸ்டமருக்கு காத்திருந்த அடுத்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் அமேசான் டெலிவரி பாய் ஒருவர் ஈ-காமர்ஸ் தளத்தில் கஸ்டமர் ஒருவர் வாங்கிய மொபைல் போனை டெலிவரி செய்யும் போது வாடிக்கையாளரை ஏமாற்றியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
மொபைல் ஃபோனை டெலிவரி செய்வதற்கு பதிலாக, அந்த 22 வயதான டெலிவரி பாய், கஸ்டமரின் ஆர்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகவும், போனை தன்னிடமே வைத்திருப்பதாக கூறினார். பின்னர் மொபைல் போன் மற்றொரு நபரிடமிருந்து போலீஸிரால் மீட்கப்பட்டது, குற்றம் சாட்டப்பட்ட டெலிவரி பாய் பணத்திற்காக போனை விற்றுள்ளார்.
அமேசானில் பணிபுரியும் அந்த டெலிவரி பாய் மீது திங்கள்கிழமை டெல்லி போலீசாருக்கு வந்த புகாரில், அமேசானில் இருந்து, தான் ஆர்டர் செய்த மொபைல் போனை டெலிவரி செய்வதற்காக அக்டோபர் 1 ஆம் தேதி, கிட்வாய் நகரில் உள்ள தனது வீட்டிற்கு டெலிவரி பாய் வந்ததாகவும், ஆனால் தனது ஆர்டர் ரத்து செய்யப்பட்டதாகவும், விரைவில் பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள் என்றும் டெலிவரி பாய் கூறியதாக ஆர்டர் செய்த கஸ்டமர் கூறினார்.
ஆனால் அமேசான் தளத்தில், இதுபற்றி அந்த கஸ்டமர் சரிபார்த்த போது, வாடிக்கையாளருக்கு அந்த மொபைல் போன் வழங்கப்பட்டதாக அது கூறியது. இதனால் அந்தத் தொகையைத் திருப்பித் தருமாறு கேட்டுதான், அந்த கஸ்டமர் புகார் அளித்துள்ளார். அப்போது அமேசானைத் தொடர்பு கொண்டு, விசாரித்தபோது, சம்மந்தப்பட்டவருக்கு ஆர்டர் செய்த செல்போன் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டதாக கூறியுள்ளனர்.
இதனை அடுத்துதான், டெல்லியின் கீர்த்தி நகரில் உள்ள ஜவஹர் முகாமில் வசிக்கும் மனோஜ் என அடையாளம் காணப்பட்ட அந்த 22 வயதான டெலிவரி பாய் மீது, இபிகோ பிரிவு 420-ன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்கைது செய்யப்பட்டார். தனக்கு பணம் தேவை என்பதால் இவ்வாறான மோசடியில் ஈடுபட வேண்டியிருந்ததாக மனோஜ் கூறினார்.