ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர்.. "தற்கொலை இல்லை.. ஆனா..." - பீதியை ஏற்படுத்திய புதிய திருப்பம்.. வெளியான பகீர் தகவல்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Jun 30, 2022 06:10 PM

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர், ஒரே நேரத்தில் இறந்து கிடந்த நிலையில் தற்போது இதற்கு காரணம் என்ன என்பது பற்றிய அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது.

Maharashtra sangli big twist in vanmore brothers family case

Also Read | "வீட்ல பயங்கர தோஷம் இருக்கு.. ஆம்பிளைங்களுக்கு தெரியாம நான் சொல்றத செய்யணும்".. புதுசாக உருட்டிய பெண் சாமியார்.. நம்பிய குடும்பத்துக்கு நேர்ந்த கதி.!

மகாராஷ்டிரா மாநிலம், சாங்கிலி மாவட்டத்தை அடுத்த மைசல் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் போபெட் வான்மோர். இவரது சகோதரர் மாணிக் வான்மோர். இவர்கள் இருவரும் தங்களின் மனைவி மாற்றம் குழந்தைகளுடன் தனித் தனியாக, மைசல் கிராமத்தில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், போபெட், மாணிக் அவர்களின் தாயார், மனைவிகள், குழந்தைகள் உட்பட மொத்தம் 9 பேர், கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம், அப்பகுதி மக்கள் அனைவரையும் கடும் பீதியில் ஆழ்த்தி இருந்தது. இது தொடர்பாக, அங்கு வந்த போலீசார் வீட்டினுள் சோதனையை மேற்கொண்டனர்.

Maharashtra sangli big twist in vanmore brothers family case

ஒரே குடும்பத்தில் 9 பேர்..

அப்போது, அவர்கள் அருகே ஒரு விஷ பாட்டிலும் கைப்பற்றப்பட்டது. மேலும், அதன் அருகே கிடந்த குறிப்பு ஒன்றில், சகோதரர் கடன் வாங்கிய நபர்கள் கொடுத்த நெருக்கடியால், அனைவரும் தற்கொலை செய்து கொண்டோம் என எழுதி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனையடுத்து, நேரடியாக தற்கொலைக்கு தூண்டியதன் குற்றத்தின் பெயரில், 25 பேரை பிடித்த போலீசார், அவரிடம் கடன் ஆவணங்களை பெற்றுக் கொண்டு, விசாரணை செய்தனர்.

சிசிடிவியால் சிக்கிய நபர்..

இதிலிருந்து, 15 பேர் சந்தேகத்திற்குரிய நபர்களாக தோன்றவே, அவர்களை போலீசார் கைதும் செய்ததாக கூறப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் அனைவரும் இறந்து போன அதே நாளில், அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களையும் போலீசார் சோதனை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது சந்தேகத்தின் பெயரில், சோலாபூரைச் சேர்ந்த மாந்த்ரீகம் செய்யும் அப்பாஸ் அலி பகவான் மற்றும் அவரது கார் ஓட்டுனர் இருவரை பிடித்து, இறந்து போன போபெட் மற்றும் மாணிக் ஆகியோருடனான தொடர்பு குறித்து விசாரித்துள்ளனர்.

Maharashtra sangli big twist in vanmore brothers family case

வீட்டுக்குள்ள புதையல் இருக்கு..

அப்போது வான்மோர் சகோதரர்கள் குடும்பம் இறந்து போனது குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது. வான்மோர் சகோதரர்களுக்கு, அப்பாஸ் அலி பகவானுடன் நீண்ட ஆண்டுகளாக மாந்த்ரீகத்தின் பெயரில் பழக்க வழக்கம் இருந்ததாகவும், அதன் பெயரில், அவர்களின் வீட்டில் புதையல் இருப்பதாகவும், அதனை எடுப்பதற்கான பூஜைகள் செய்வதற்காக ஒரு கோடி ரூபாய் வரை செலவாகவும் என்றும் பகவான் கூறி உள்ளார்.

Maharashtra sangli big twist in vanmore brothers family case

மேலும், அந்த புதையலை எடுத்து விட்டால், பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு நீங்கள் அதிபதி ஆகி விடுவீர்கள் என்றும் அப்பாஸ் அலி பகவான், வான்மோர் சகோதரர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை நம்பி, அவர்கள் சுமார் 1 கோடி ரூபாய் வரை பணத்தை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், புதையல் எடுப்பதற்கான பூஜைகள் எதுவும் செய்யாமல், பகவான் இருந்து வந்ததால், பணத்தையும் வான்மோர் சகோதரர்கள் திருப்பிக் கேட்டுள்ளனர்.

இந்த தீர்த்தம் குடிங்க..

இதனால், மொத்த குடும்பத்தையும் தீர்த்துக் கட்ட எண்ணிய அபபாஸ் அலி பகவான், அவர்கள் இறந்த அன்று, வான்மோர் சகோதரர்கள் வீட்டிற்கு வந்துள்ளார். தொடர்ந்து, மாடியில் வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றன் பின் ஒருவராக வர வைத்து, பூஜையில் மாந்த்ரீகம் செய்யப்பட்ட தேநீரை அனைவரும் குடிக்க வேண்டும் என கூறி, விஷம் கலந்ததேநீரை கொடுத்துள்ளார் பகவான்.

Maharashtra sangli big twist in vanmore brothers family case

இதன் பின்னர், அனைவரும் இறந்த போது, கடிதம் எழுதி தற்கொலை என திசை திருப்பி விட்டு, அவர்கள் தப்பி சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குடும்பத்திலுள்ள 9 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டு வந்த நிலையில், குழந்தைகள் என்றும் பாராமல், ஒரு குடும்பத்தையே தீர்த்துக் கட்டிய மாந்த்ரீகவாதி குறித்த உண்மை, பலரையும் பதறச் செய்துள்ளது.

Also Read | "என் புருஷன் வாடகைக்கு.." திடீர்'ன்னு மனைவிக்கு தோணுன ஐடியா.. "அட, இது தான் விஷயமா??"

Tags : #MAHARASHTRA #VANMORE BROTHERS FAMILY CASE #DEAD OF 9 MEMBERS OF FAMILY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Maharashtra sangli big twist in vanmore brothers family case | India News.