‘எமனாக மாறிய ஏணி’.. கோயில் திருவிழாவில் ராட்டிணத்தை சரி செய்ய சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோயில் திருவிழாவுக்காக ராட்டிணம் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அருகே உள்ள உப்பார்பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி. இவருடைய மகன் முத்துக்குமார் (வயது 32). இவர் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்துள்ளார். இந்த சூழலில் தேனி அருகே உள்ள வீரபாண்டியில் கௌமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாவை நடைபெற்று வருகிறது.
அதனால் பக்தர்களின் பொழுதுபோக்குக்காக ராட்சத ராட்டினங்கள் உள்பட பல்வேறு விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய பொருட்காட்சி நடைபெற்று வருகிறது. அந்த பொருட்காட்சி பகுதிகளில் முத்துக்குமார் எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்துள்ளதாக தெரிகிறது. ராட்டிணம் அமைக்கும் பணிக்காக ஏணியை முத்துக்குமார் தூக்கி வந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஏணியின் முனை மின் கம்பத்தின் உயர் மின் அழுத்த கம்பியில் உரசியுள்ளது.
இதனால் முத்துக்குமார் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் முத்துக்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் முத்துக்குமார் எடுத்துச்சென்ற அலுமினிய ஏணியில் மின்சாரம் பாய்ந்தது காரணம் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த முத்துக்குமாருக்கு 7 வயதில் விஷால் பாண்டி என்ற மகனும், 10 வயது விசாலினி என்ற மகளும், 7 மாத பெண் குழந்தையும் உள்ளது. கோயில் திருவிழாவில் ராட்டிணம் அமைக்கும் பணியின்போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்: http://www.behindwoods.com/bgm8/