உயிருக்கே ஆபத்துன்னு நடுராத்திரில 100க்கு கால் செஞ்ச இளைஞர்.. பதறிப்போய் ஓடிவந்த போலீஸ்.. கடைசில காரணத்தை கேட்டு செம்ம கடுப்பான அதிகாரிகள்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானா மாநிலத்தில் அவசர அழைப்பு எண்ணான 100-க்கு போன் செய்த இளைஞர் ஒருவர் காவல்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Youth dials emergency service requests beer arrested Youth dials emergency service requests beer arrested](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/youth-dials-emergency-service-requests-beer-arrested.jpg)
Also Read | ஸ்டாண்டிங்கே ஒரு தினுசா இருக்கே... பேட்டிங் அப்போ அஷ்வின் கொடுத்த போஸ்.. வைரல் புகைப்படம்..!
உயிருக்கு ஆபத்து
தெலுங்கானா மாநிலத்தின் தவுலதாபாத் பகுதியில் உள்ள நர்சாபூர் கிராமத்தை சேர்ந்தவர் மது. இவருக்கு 22 வயதாகிறது. இந்நிலையில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு 2.30 மணிக்கு அவசர அழைப்பு எண்ணான 100க்கு போன் செய்திருக்கிறார் மது. அப்போது பேசிய காவல்துறை கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் கும்பல் ஒன்று தன்னை தாக்குவதாகவும் இதனால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் ஆகவே உடனடியாக விரைந்து வருமாறும் மது கோரிக்கை வைத்ததாக சொல்லப்படுகிறது.
இதனிடைய மதுவின் போன்கால் குறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து நர்சாபூர் பகுதியில் ரோந்து சென்ற காவல்துறை அதிகாரிகளை சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து செல்லுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அதிர்ச்சியான அதிகாரிகள்
இதைத் தொடர்ந்து, நர்சாபூர் கிராமத்திற்கு சென்ற காவல்துறை அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான சம்பவம் ஏதும் நடைபெறாததால் குழப்பம் அடைந்தனர். பின்னர், மதுவின் வீட்டிற்கே சென்ற காவல்துறை அதிகாரிகளிடம் "இரண்டு பாட்டில் மது வேண்டும் அதற்காகவே 100 க்கு போன் செய்தேன்" என மது கூறியதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து மதுவின் மீது வழக்கு பதிவு செய்து, அதிகாரிகள் அவருக்கு கவுன்சலிங் வழங்கியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய காவல்துறை உதவி ஆய்வாளர் ரமேஷ் குமார்,"உண்மையான அவசர காலங்களில் மட்டும் டயல் 100 சேவையைப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் அறிவுறுத்துகிறோம். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மதுவுக்கு காவல் நிலையத்தில் அறிவுரை வழங்கப்பட்டது" என்றார்.
மது வேண்டும் என காவல்துறை அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தெலுங்கானா இளைஞர் ஒருவர் போன் செய்த விஷயம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது. இதேபோல, கடந்த மாதத்தில் நல்கொண்டா பகுதியை சேர்ந்த நபர் தனது மனைவி மட்டன் சமைக்கவில்லை என 100 க்கு போன் செய்தது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)