‘படிப்பை பாதியிலேயே விட்ட இளைஞர்’.. இப்போ ஒரு கம்பெனிக்கு ‘ஓனர்’.. தேள்களால் அடித்த யோகம்..!
முகப்பு > செய்திகள் > உலகம்இளைஞர் ஒருவர் தேள்களின் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வரும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

எகிப்து நாட்டை சேர்ந்தவர் 25 வயதான முகமது ஹாம்டி போஷ்டா (Mohamed Hamdy Boshta). பட்டப்படிப்பு படித்து வந்த இவர், தேள்களின் விஷத்தால் தயாரிக்கப்படும் விஷமுறிவு மருந்துக்கு வெளிநாடுகளில் அதிக மவுசு இருப்பதை அறிந்துள்ளார். உடனே தனது படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு பாலைவனத்தில் தேள்களை பிடிக்க ஆரம்பித்துள்ளார்.
பாலைவனத்தில் பிடிக்கப்பட்ட தேள்களில் இருந்து விஷத்தை சேகரித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய துவங்கியுள்ளார். இதற்காக ஒரு பண்ணை அமைத்து அவற்றில் சுமார் 80 ஆயிரம் தேள்களை பராமரித்து வருகிறார். 1 கிராம் தேள் விஷம் 7 லட்சத்துக்கும் மேல் விற்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கிடைத்த பணத்தை வைத்து Cairo Venom Company என்ற மருந்து நிறுவனத்தை ஆரம்பித்து முகமது ஹாம்டி போஸ்டா அசத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்
