'எங்க பாத்தாலும் கொரோனா பேச்சு'...'சட்டுன்னு திரும்பி பாக்க வச்ச சிறுமி'... வைரலாகும் போட்டோ!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Mar 27, 2020 10:33 AM

தற்போது உலகின் எந்த பகுதியில் யார் இருந்தாலும், அவர்கள் அனைவர் வாயிலிருந்தும் வரும் ஒரே வார்த்தை கொரோனா. இந்த ஒற்றை வைரஸ் உலகையே தலைகீழாகப் புரட்டிப் போட்டு விட்டது என்றே கூறலாம். வல்லரசு நாடுகள் கூட என்ன செய்வது எனத் தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

World’s Cutest Baby Anahita Hashemzadeh Does Not Have Coronavirus

இந்த சூழ்நிலையில் மக்கள் மத்தியில் ஒரு வித இறுக்கம் மற்றும் பயமே மேலோங்கி நிற்கிறது. இந்த நேரம் 'அனஹிதா ஹாஷெம்ஜாடே' (Anahita Hashemzadeh) என்ற ஈரான் சிறுமியின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வரலாகப் பரவி வருகிறது. இதற்கு ஒரு அழகான காரணமும் இருக்கிறது. பொதுவாக நாம் பேச்சு வாக்கில் சொல்வது உண்டு. என்ன கஷ்டம் இருந்தாலும் குழந்தைகளின் முகத்தை ஒரு முறை பாத்த போதும், எல்லா கஷ்டமும் பறந்து போயிடும். அதற்குச் சரியான உதாரணம் தான் அனஹிதா ஹாஷெம்ஜாடே.

கடந்த வருடம் உலகிலேயே இந்த ஈரான் குழந்தையின் சிரிப்பு மிக அழகானது என, சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது. தற்போது இந்த குழந்தையின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதற்கு முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறது. தற்போது இருக்கும் சூழ்நிலையில் பலரும் தைரியமாகவும், பாசிட்டிவ் எனர்ஜியோடும் இருக்க வேண்டியது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

அனஹிதாவின் புகைப்படத்தை ஷேர் செய்து வரும் நெட்டிசன்கள் என்ன கஷ்டம் வந்தாலும் இந்த குழந்தையின் முகத்தை நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள், எல்லாம் பறந்து போய்விடும் எனப் பதிவிட்டு வருகிறார்கள். நாமும்  பாசிட்டிவ் எனர்ஜியோடும், அந்த குழந்தையின் முகத்தில் தெரியும் சிரிப்போடு இருப்போம் நண்பர்களே!

Tags : #CORONAVIRUS #CORONA #ANAHITA HASHEMZADEH #CUTEST BABY