'CM-அ என் கோட்டைக்கு வர சொல்லுங்க'... 'கொரோனாவ கண்ணுல காட்டுங்க'... 'கெத்து' காட்டிய இளைஞரை வச்சு செஞ்ச போலீஸ்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு உத்தரவின் போது வெளியில் சுற்றி திரிந்த இளைஞர் ஒருவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. மேலும், மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியில் சில கட்டுப்பாடுகளுடன் வந்து செல்லலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், அறந்தாங்கி பகுதியில் வெளியே சுற்றி திரிந்த இளைஞர் ஒருவரை போலீசார் விசாரித்த போது அந்த இளைஞர் போலீசார்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 'கொரோனா வைரசை எனது கண்ணில் காட்டுங்கள். முதலமைச்சரை என்னிடம் வந்து பேச சொல்லுங்கள். எங்களுக்கு கொரோனா வைரஸ் பரவும் என்றால் போலீசார் ஆகிய நீங்களும் வீட்டிற்குள் தான் இருக்க வேண்டும்' என்றெல்லாம் பேசி அந்த இளைஞர் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அங்கிருந்த போலீசார் அந்த இளைஞரை அழைத்துக் கொண்டு காவல் நிலையம் சென்றனர்.
சாலையோரம் போலீசாரிடம் கத்திப் பேசிக் கொண்டிருந்த இளைஞர் காவல் நிலையம் சென்றதும் போலீசாரின் லத்திக்கு முன் பெட்டிப் பாம்பாய் அடங்கி விட்டார். மேலும் தான் இனிமேல் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டேன் என்றும், வெளியில் சுற்றித் திரியாமல் வீட்டிலேயே இருந்து கொள்வதாகவும் கூறினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
