ஈரோடு 'மல்லியிலும்' கைவைத்த கொரோனா... 'வேதனையால்' புலம்பும் விவசாயிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்கு உள்ளேயே முடங்கி கிடக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதி, விவசாயம் போன்ற பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
அந்த வகையில் ஈரோடு மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் கொரோனா அச்சம் காரணமாக மல்லிகை பூக்கள் பறிக்கப்படாமல் செடியிலேயே விடப்பட்ட நிலையில் உள்ளது. இதன் காரணமாக நாளொன்றுக்கு 25 டன் மல்லிகை பூக்கள் வீணாவதுடன், ரூபாய் 1 கோடி அளவிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது என விவசாயிகள் வேதனை தெரிவித்து இருக்கின்றனர்.
இதேபோல ஓசூர் ரோஜாப்பூக்கள், கரூர் ஜவுளி, காஞ்சிபுரம் பட்டு, தூத்துக்குடி உப்பு உள்ளிட்ட பல்வேறு புகழ்மிக்க தமிழக பொருட்களின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா காரணமாக தமிழகத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.