'6 வயது சிறுவன் வயிற்றில்'... 'இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்'!
முகப்பு > செய்திகள் > உலகம்By Sangeetha | Aug 22, 2019 08:00 PM
6 வயது சிறுவன் வயிற்றில் 61 காந்த மணிகள் இருந்ததை கண்டு மருத்துவர் மற்றும் அக்குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹெயிலாங்ஜியாங் மகாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஒருவன், வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இந்நிலையில் அச்சிறுவனுக்கு மருத்துவர்கள் ஸ்கேன் பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனை முடிவில் சிறுவனின் வயிற்றில் வட்ட வடிவில் 61 சிறுகுண்டுகள் இருந்தது கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அச்சிறுவனின் பெற்றோரிடம், மருத்துவர்கள் விசாரித்தனர்.
அதில் சிறுவன் விளையாடுவதற்காக சில நாட்களுக்கு முன்பு 64 காந்த மணிகள் வாங்கிக் கொடுத்தாக அவனது தாயார் கூறியுள்ளார். சிறுவன் அந்த காந்த மணிகளைத்தான் முழுங்கியுள்ளான் என்பதை அறிந்த மருத்துவர்கள், உடனடியாக அறுவை சிகிச்சை ஏற்பாடு செய்துள்ளனர். மூன்று மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்பு, சிறுவனின் வயிற்றில் இருந்து 61 காந்த மணிகளையும் வெளியே எடுத்துள்ளனர்.
சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சு போ கூறுகையில் ‘முதலில் காந்த மணிகளை நெக்லஸ் என்றே நினைத்தோம். பின்பு சிறுவன் முழுங்கியுள்ளது காந்த மணிகள் என்றவுடன் அதிர்ந்துப்போனோம். வயிற்றில் இருந்த காந்த மணிகள் உயிருக்கு ஆபத்தவை ஏற்படுத்தக்கூடியவை. அறுவை சிகிச்சைக்குப்பின் சிறுவன் தற்போது நன்றாக உள்ளான்’ என தெரிவித்துள்ளார்.
