"என்னம்மா அது.. மண்ட மேல SNAKE மாதிரி ஒரு கொண்ட??.." உறைந்து போன நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Dec 23, 2021 11:16 PM

நாள் தோறும் நாம் சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என இவற்றின் பக்கம் சென்றால், ஒரு பக்கம் திரைப்படம் தொடர்பான பாடல்கள் மற்றும் டீசர், ட்ரைலர் என ஹிட்டடித்து கொண்டிருக்கும்.

woman uses snake like hair band in shopping mall video gone viral

மறுபக்கம், மீம்ஸ்கள், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் என நெட்டிசன்கள் லைக்குகளை அள்ளிக் கொண்டிருக்கும். இன்னொரு பக்கம், ஏதாவது ஒரு நாட்டில் நடந்த வினோத சம்பவங்கள் அல்லது கோமாளித்தனமான காரியங்கள், சாதனை முயற்சிகள், மிருகங்களின் வைரல் வீடியோக்கள் என ஏதேனும் ஒன்று, நாளுக்கு நாள் புதிது புதிதாக உதயமாகிக் கொண்டே இருக்கும்.

இப்படி நாளுக்கு நாள், நாம் சமூக வலைத்தளங்களில், சிரிக்கவும், சிந்திக்கவும், மகிழவும், வெறுக்கவும், கற்றுக் கொள்ளவும் பல்வேறு விஷயங்கள் வைரலாகிக் கொண்டே தான் இருக்கின்றன. தற்போது, அப்படி ஒரு வீடியோ தான், இணையத்தில் அதிகம் வைரலாகி, பாதி பேரை குழம்பவும், யோசிக்கவும் செய்துள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான வீடியோ ஒன்றில், இளம்பெண் ஒருவர் ஷாப்பிங் மால் ஒன்றில் அங்கும் இங்குமாக சுற்றித் திரிகிறார். தொடர்ந்து, அவரது தலை பகுதிக்கு கேமரா சற்று Zoom-in செல்கிறது. அந்த பெண் தனது முடி மீது வழக்கத்திற்கு மாறான ஒரு ஹேர் பேன்ட் வைத்திருப்பது தெரிகிறது. கேமரா இன்னும் அருகில் செல்ல செல்ல, அந்த பெண் தலையில் கட்டியிருப்பது ஒரு பாம்பை போல இருக்கிறது.

அந்த வீடியோவை எடுத்துக் கொண்டே செல்லும் இளைஞரும், 'யாருக்கும் தெரியப் போவதில்லை' என கூறிக் கொண்டே வீடியோவை எடுக்கிறார். இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில்; அதிகம் வைரலான நிலையில், சற்று குழப்பத்திலும், அதிர்ச்சியிலும் உறைந்து போயிருக்கின்றனர். ஒவ்வொருவரும், இதற்கு பல விதமான கமெண்ட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

ஒரு சிலர், பாம்பு தான் என்றும், மேலும் சிலர் பாம்பு இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். அது போக, யாருக்காவது அது என்ன என்பது சரியாக தெரிகிறதா? என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு வேளை அது நிஜ பாம்பாக இல்லாமல் போனாலும், இப்படி பொது இடங்களில் செல்லும் போது, மற்றவர்களை பயமுறுத்தும் இது போன்ற செயல்களில், ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது என்றும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Tags : #VIRAL VIDEO #SNAKE #WOMAN #வைரல் வீடியோ #பாம்பு

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman uses snake like hair band in shopping mall video gone viral | World News.