எல்லை தாண்டிய காதல்... பெண்ணை நேரில் பார்க்க இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் இளைஞர்.. நடந்த ட்விஸ்ட்
முகப்பு > செய்திகள் > இந்தியாஜெய்பூர் : சமூக வலைதளத்தில் பழகிய பெண்ணை நேரில் சந்திக்க இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானியரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையான ராஜஸ்தான் மாநிலத்தின் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) ஊடுருவி வந்துள்ளார். இவரை கைது செய்த பாதுகாப்புப்படை போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
அப்போது சமூக வலைதளம் மூலமாக மும்பையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை சந்திக்க வேண்டி இந்தியா-பாகிஸ்தான் எல்லையை கடந்து வந்ததாக கூறியுள்ளார்.
இதனை அடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமூக வலைதளம் மூலம் அறிமுகமான பெண்ணைக் காண இந்திய எல்லையை தாண்டி வந்த பாகிஸ்தான் இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
