நல்ல 'விஷம்' இருக்குற 'பாம்பா' ஒண்ணு கொடுங்க சார்...! 'மருமகள் போட்ட மாஸ்டர் பிளான்...' 'இப்படி' ஒரு வழக்கமா...? அந்த பக்கம் 'தலை' வச்சு படுக்க கூடாது போலையே...!
முகப்பு > செய்திகள் > இந்தியாராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜுனு மாவட்டத்தில் வசிப்பவர் அல்பனா, சச்சின் தம்பதி. ராணுவத்தில் பணிபுரியும் சச்சின் தான் பணிக்கு செல்லும் காலங்களில் தன் மனைவி அல்பனாவை தனது தாயார் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், அல்பனா தன் திருமணம் பின்பும் ஜெய்ப்பூரை சேர்ந்த தன் முன்னாள் காதலன் மணிஷுடன் தொடர்ந்து செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை அறிந்த அல்பனாவின் மாமியார் அவரை கண்டித்துள்ளார்.
இருப்பினும் எதையும் கண்டுகொள்ளாத அல்பனா தன் காதலருடன் பேசி வந்ததோடு, தன் மாமியாரை கொல்லவும் திட்டமிட்டுள்ளார். பொதுவாகவே ராஜஸ்தானில் பாம்பு கடியால் இறப்பவர்கள் அதிகம். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொண்ட அல்பனா, அவரது காதலர் மணிஷ் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு பாம்பை ரூ.10,000 கொடுத்து வாங்கியுள்ளனர்.
அவர்களின் திட்டப்படியே கடந்த 2018-ஆம் ஆண்டு, ஜூன் 2-ம்தேதி இரவு மாமியார் சுபோத் தேவி படுக்கை அருகே கொடிய விஷம் கொண்ட பாம்பை ஒரு பையில் வைத்து அதை கடிக்க வைத்து கொலை செய்தனர். அதோடு, மருத்துவ மனைக்கு செல்லும் போதே அந்த பாட்டி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இந்நிலையில் போலீஸார், அல்பனா செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, சுபோத் தேவி இறப்பதற்கு முதல்நாள் இரவு ஒரு குறிப்பிட்ட எண்ணிற்கு தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட அழைப்புகள் சென்றதை கண்டறிந்து விசாரணையை தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணையில் அல்பனா, அவரின் முன்னாள் காதலர் மணிஷ், அவரின் நண்பர் ஆகிய 3 பேர் தான் பாம்பைப் பயன்படுத்தி மாமியாரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். அதன்பின் அவர்களுக்கு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக சிறையில இருக்கும் மூவரும்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி ஆகியோர் அமர்வு ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து அதிரடி தீர்ப்பை வழங்கியது.
அந்த அமரவில், 'ஜாமீன் மனு தாக்கல் செய்த குற்றவாளிகள் பாம்பை கொடூரமான ஆயுதமாக மாற்றி ஒரு மனிதரைக் கொலை செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் இதுபோன்று பாம்பை பயன்படுத்தி கொலை செய்வது வழக்கமாகிவிட்டது. இந்தவழக்கில் மூவரும் புதிய முறையில் பாம்பைப் பயன்படுத்தி ஒருநபரைக் கொலை செய்துள்ளீர்கள். ஆதலால் ஜாமீன் வழங்கிட முடியாது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
