ஒமைக்ரானை விடுங்க அடுத்து 'டெல்மைக்ரான்' வந்திடுச்சு... ஐரோப்பா, அமெரிக்காவுக்குள் நுழைஞ்சாச்சு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸின் ஒரு வகையான ஒமைக்ரான் குறித்தே நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அதற்குள் அடுத்த ரகமான ‘டெல்மைக்ரான்’ ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் பரவத் தொடங்கி உள்ளது.
2020-ம் ஆண்டு தொடங்கிய கொரோனா போராட்டம் 2022-ம் ஆண்டிலாவது முடிந்து வைரஸ் இல்லா வாழ்க்கையை நாம் வாழத் தொடங்கலாம் எனப் பலரும் நம்பி கொண்டிருந்தோம். ஆனால், கொரோனா வைரஸின் பல்வேறு ரக வைரஸ் மற்றங்களும் தொடர்ந்து பரவத் தொடங்கி உள்ளன. ஆராய்ச்சியாளர்கள், டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ்களின் கூட்டே டெல்மைக்ரான் என விளக்கி உள்ளனர்.
டெல்டா மற்றும் ஒமைக்ரான் ரகங்களை விட ‘டெல்மைக்ரான்’ அதி வேகமாகப் பரவும் திறன் கொண்டது. இதுகுறித்து இந்திய மருத்துவர்கள் கூறுகையில், ‘டெல்டா ரக வைரஸ் இந்தியாவில் பரவினாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனாலு, டெல்டாவின் இடத்துக்கும் ஒமைக்ரான் வைரஸ் வந்து தற்போது மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது’ என்கின்றனர்.
முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் ரக வைரஸ் தற்போது 106 நாடுகளுக்கு பரவி உள்ளது. இந்தியாவில் இதுவரையில் 16 மாநிலங்களில் ஒமைக்ரான் ரக வைரஸ் பரவி உள்ளது. 236 பேர் நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகப்பட்சமாக மஹாராஷ்டிராவில் 65 பேருக்கும் டெல்லியில் 64 பேருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
டெல்டா மற்றும் ஒமைக்ரான் இணைந்த ரகமான ‘டெல்மைக்ரான்’ பாதிக்கப்பட்டு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சிலர் தற்போது மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பே எந்தளவுக்கு இருக்கும் எனக் கண்டறியா சூழல் உள்ள நிலையில் டெல்மைக்ரான் இந்தியாவில் எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை என்றே இந்திய மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் அதிகப்படியானோர் கொரோனா பாதிப்புக்குப் பின்னர் டெல்டா வைரஸ் பாதிப்புக்கும் உள்ளாகிவிட்டனர். இதனால் ஒமைக்ரான் பரவலே பெரிய பாதிப்பு ஏற்படுத்துமா அல்லது இந்தியர்களுக்கு தடுப்பூசி மற்றும் முந்தைய வைரஸ் பாதிப்புகள் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்குமா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.