VIDEO: “கண்ட்ரோலா இருப்பேன்.. திரும்பவும் நான் தான் ஓட்டுவேன்!” - ‘அடம் பிடித்த’ கோவக்கார கிளி!.. யார் இவர்?.. சென்னையில் தொடரும் ‘போதை’ சம்பவங்கள்! வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Behindwoods News Bureau | Jan 21, 2021 08:44 PM

அண்மைக்காலமாகவே சென்னையில் போதையில் கார் ஓட்டிவந்து போலீஸாரிடம் பிடிபட்டு, பிடிபட்டதும் போலீஸாருடன் கன்னா பின்னா என வாயை விடும் பெண்களின் அட்டூழியம் அதிகமாகிக் கொண்டே போகிறது. 

another chennai women caught to police and shout at them

திருவள்ளூருக்கு போதையில் கார் ஓட்டிச் சென்று வடமாநில பெண் அடுத்தடுத்து சில கார்கள் மீது மோதியுள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு பணம் கொடுத்து மன்னிப்பு கேட்டுவிட்டு தொடர்ந்து மது போதையில் காரை ஓட்டியுள்ளார்.

இதை அறிந்த திருவள்ளூர் மாவட்ட போலீஸார் விரைந்து வந்து அப்பெண்ணின் காரை மடக்கியபோது, அவர் போதையில் இருந்ததும் ஓரகடத்துக்கு சென்று கொண்டிருந்ததும் தெரியவந்ததும். ஆனால் ஜீப்பில் சாய்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்த படி போலீஸாரிடம் ஆவேசமாகவும், ஆங்கிலத்திலும் வாக்குவாதம் செய்த அவர், தான் வாழ்க்கையில் எடுத்த மிகப்பெரிய தவறான முடிவு தமிழ்நாட்டுக்கு வர வேண்டும் என முடிவு செய்துதான் என புலம்பினார்.

மேலும் காரில் தான் செல்வேன் என அடம் பிடித்துள்ளார் அப்பெண். எனினும் அந்த பெண்ணின் செல்போனை வாங்கி, அவரது சென்னை நண்பர்களை வரவழைத்து பெற்றோரிடம் ஒப்படைக்க அறிவுறுத்திய போலீஸார் அப்பெண்ணின் ஜீப்பை மட்டும் பறிமுதல் செய்தனர். 

ALSO READ:  “கன்வெயர் பெல்ட்டில் சூட்கேஸ் வர்றது போல் வருது”!.. சொல்லும்போதே வெடித்து அழும் பிரேத பரிசோதனை செய்யும் மருத்துவ பெண் ஊழியர் !!.. உலகையே கலங்க வைத்த வீடியோ!

வடமாநிலத்தில் ஹரியானாவைச் சேர்ந்தவர் நித்து. திருமணம் ஆன இவரது கணவர் பெயர் நிகில் பாண்டே என கூறப்படுகிறது. இன்ஜினீயரிங் படித்திருக்கும் நித்து பயிற்சிக்காக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவருடன் திருவள்ளூர் மேல்நல்லாத்தூரில் ஓராண்டாக வடமாநில பெண் ஒருவர் பணியாற்றி வந்தார்.

அந்தப் பெண் மணவாள நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில்  தம் நண்பர்களுக்கு விருந்தளிக்க முடிவு செய்ததை அடுத்து, அதில் பங்கேற்ற நித்து மது அருந்த, விருந்தில் மது அருந்தியதும் போதை தலைக்கேற, தன் காரில் அவர் ஓரகடத்துக்கு சென்றுள்ளார்.

அப்போதுதான் இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளன. அப்போதும் காரில் தொடர்ந்து செல்ல வேண்டாம் என அறிவுறுத்திய போலீஸாரிடம் அந்த போதையிலும் நித்து, ‘தலைகீழாகத்தான் குதிப்பேன்’ என கவுண்டமணி ஒரு காமெடி காட்சியில் பேசுவது போல, “நான் கண்ட்ரோலாகத் தான் இருக்கேன். கார்ல தான் போவேன்!’ என்று புலம்பியிருக்கிறார். இப்படி நேற்றிரவு ஏழரை மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை 2 மணி நேரம் நீடித்திருக்கிறது இந்த சம்பவம்.

ALSO READ: Video: “சித்ரா மேல சந்தேகப்பட்டு விர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்க..”.. “இந்த சைகோவ வெளிய விட்டா 200% இதான் நடக்கும்!” - ரோஹித் பரபரப்பு பேட்டி!

கடந்த டிசம்பர் மாதம் தான், சினிமாவில் உதவி இயக்குநராக பணிபுரிந்த இளம் பெண் ஒருவர் போதையில் கார் ஓட்டிவந்து, சென்னை திருவான்மியூர் போலீஸாரின் வாகன சோதனையில் சிக்கிய போது, ஆபாசமாக பேசி வைரலானார். 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Another chennai women caught to police and shout at them | Tamil Nadu News.