பகலில் நோட்டம் விடும் இளம்பெண்.. இரவில் நடக்கும் கொள்ளை.. தமிழகத்தையே உலுக்கிய ஆந்திர கும்பல் கைது..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Feb 03, 2023 08:45 PM

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்களை நிகழ்த்தி வந்த ஆந்திராவை சேர்ந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர்.

3 Member Andhra robber gang arrested by kallakurichi police

                         Images are subject to © copyright to their respective owners.

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம்  பகுதியை சேர்ந்தவர் பர்னபாஸ். ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் சென்னையில் இருக்கும் தனது மகன் வீட்டுக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி பர்னபாஸ் வீட்டுக்கு திரும்பியிருக்கிறார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 17 சவரன் நகை காணமல்போனது தெரியவந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து ரிஷிவந்தியம் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார்.

கடந்த 3 மாதங்களில் அதே பகுதியில் வெவ்வேறு இடங்களிலும் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றதால் காவல்துறை தனிப்படை அமைக்கப்பட்டது. இதனையடுத்து, கொள்ளை நடந்த இரவு அந்த பகுதியில் இயங்கிய போன் நம்பர்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு எண்கள் கொள்ளை நடந்த நேரத்தில் அந்தப் பகுதியில் பதிவாகி இருப்பது தெரியவந்திருக்கிறது.

3 Member Andhra robber gang arrested by kallakurichi police

Images are subject to © copyright to their respective owners.

அதேபோல, அதற்கு முன்னர் கொள்ளை நடைபெற்ற இடங்களிலும் இதே போன் நம்பர் இருந்ததை காவல்துறையினர் உறுதி செய்திருக்கின்றனர். இதனை தொடர்ந்து அந்த இரு எண்களுக்கும் வரும் போன்கால்களை போலீசார் கவனிக்கவே, பெண் ஒருவர் பர்னபாஸ் வீட்டில் கொள்ளை நடந்த இரவு அந்த இரண்டு எண்களுக்கும் போன் செய்திருப்பது தெரியவந்திருக்கிறது.

இதனையடுத்து அந்த பெண் சிந்து என்பதும் அவர் பகண்டை கூட்டுச்சாலை பகுதியில் வசித்து வந்ததும் தெரியவந்திருக்கிறது. உடனடியாக அவரை காவல்துறையினர் விசாரிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. சிந்து தொடர்புகொண்ட இரண்டு எண்கள் பாலாஜி மற்றும் கார்த்திக் என்பவர்களுடையது என்பதை அறிந்த போலீசார் அவர்களையும் கைது செய்துள்ளனர்.

3 Member Andhra robber gang arrested by kallakurichi police

 Images are subject to © copyright to their respective owners.

பகலில் சிந்து அப்பகுதியில் பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டம் விட்டு அதுபற்றி பாலாஜி மற்றும் கார்த்திக் ஆகிய இருவரிடம் கூறியதும் பின்னர் இளைஞர் இருவரும் இரவு நேரத்தில் சென்று கொள்ளையடித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஆந்திராவை சேர்ந்த இந்த 3 பேரும் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இதுபோல கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர். இவர்களிடம் இருந்து 41 சவரன் தங்க நகைகள், பைக், கார் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திவந்த ஆந்திராவை சேர்ந்த கும்பல் கைது செய்யப்பட்டிருப்பது மக்களிடையே நிம்மதியை அளித்துள்ளது.

Tags : #KALLAKURICHI #RISHIVANTHIYAM #POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. 3 Member Andhra robber gang arrested by kallakurichi police | Tamil Nadu News.