"நான் ஒருத்தரை விரும்புறேன்".. நிச்சயமான மாப்பிள்ளையிடம் சொன்ன இளம்பெண் மாயம்.. விசாரணையில் தெரியவந்த நடுங்கவைக்கும் உண்மை!!
முகப்பு > செய்திகள் > இந்தியாமகாராஷ்டிரா மாநிலம், நாந்தெட் மாவட்டத்தில் அமைந்துள்ள மகிபால் கிராமத்தை சேர்ந்தவர் சுபாங்கி ஜோக்தாந்த். இவர் கல்லூரியில் படித்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Images are subject to © copyright to their respective owners
அப்படி இருக்கையில், இளம்பெண் சுபாங்கி ஜோக்தாந்த்திற்கு அவரது குடும்பத்தினர் சேர்ந்து திருமணம் ஒன்று நிச்சயித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஆனால், அதே வேளையில் வேறொரு நபரை சுபாங்கி காதலித்து வந்ததாகவும் தெரிகிறது.இந்த நிலையில், வருங்கால கணவராக குடும்பம் நிச்சயித்த வாலிபரிடம் தனது காதல் குறித்தும் சுபாங்கி தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.
அப்படி ஒரு சூழலில், இதன் பெயரில் திருமணமும் நின்று போனதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, சுபாங்கியின் குடும்பத்தினரும் சற்று கோபத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே, மாணவி சுபாங்கியும் திடீரென மாயமானதாக தெரிகிறது. நிச்சயிக்கப்பட்ட வாலிபரிடம் தனது காதல் பற்றி சொன்ன பிறகு இளம்பெண் மாயம் ஆனதால் கடும் பரபரப்பும் உருவாகி இருந்தது.
அப்படி இருக்கையில், இது பற்றி போலீசாரிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, புகாரின் பெயரில் மாயமான இளம் பெண்ணை போலீசார் தேடி வந்துள்ளனர். அது மட்டுமில்லாமல், இளம் பெண் சுபாங்கியின் குடும்பத்தினரையும் போலீசார் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
சுபாங்கியின் காதலுக்கு அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரிகிறது. இதன் பெயரில் சில சண்டைகளும் உருவாகவே, கடைசியில் குடும்பத்தினர் சிலர் சுபாங்கியை கொன்றுள்ள திடுக்கிடும் தகவல்களும் தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக சுபாங்கியின் குடும்பத்தினர் சிலரை போலீசார் கைது செய்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம் பெண் காதலின் பெயரில் அவரது திருமணம் நின்று போனதால் குடும்பத்தினர் செய்த விஷயம், பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
