"இத மாதிரி ஒரு சோகம் எதுவுமில்ல".. விராட் கோலியின் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ள டெஸ்ட் தொடரை தான் தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் கூர்ந்து கவனித்து வருகின்றனர். இதற்கு காரணம், இரு அணிகளும் இதற்கு முன்பு ஆஸ்திரேலிய மண்ணில் வைத்து மோதி இருந்த இரண்டு டெஸ்ட் தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி இருந்தது தான்.

Images are subject to © copyright to their respective owners.
Also Read | “பெரும் உயிரிழப்புகள், அழிவுகள் வேதனை அளிக்கிறது” - துருக்கி நிலநடுக்கம்.. முதல்வர் ஸ்டாலின் உருக்கம்.!
இதனால் இந்த முறை இந்திய கிரிக்கெட் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மும்முரமாக தயாராகி வருகிறது.
அதே போல இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேற வேண்டுமென்றால், இந்த தொடரை வெல்லவோ அல்லது தொடரை சமன் செய்ய வேண்டுமென்ற நிலையோ உருவாக வேண்டும். இப்படி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்குமே ஒரு காரணம் இருப்பதால், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நிச்சயம் விறுவிறுப்பை எகிற வைக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
Images are subject to © copyright to their respective owners.
இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி, நாளை மறுநாள் (09.02.2023) தொடங்க உள்ளது. 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை தொடர்ந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரிலும் மோதுகிறது.
இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ட்விட்டரில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
விராட் கோலி தற்போது பகிர்ந்துள்ள ட்வீட் ஒன்றில், "உங்களின் புதிய மொபைலை Unbox செய்யாமல் தொலைப்பது போல ஒரு சோகம் எதுவுமே இல்ல ☹️. யாராவது பார்த்தீர்களா?" என குறிப்பிட்டுள்ளார். கோலியின் இந்த ட்வீட் தற்போது அதிகம் வைரலாகி வரும் சூழலில், பலரும் தங்கள் தொலைத்த போன் கதைகளை கமெண்ட்டில் குறிப்பிட்டு வருகின்றனர். மறுபக்கம், கோலி அப்படி ட்வீட் செய்தது வேறு ஏதாவது காரணத்திற்காக இருக்குமா என்பதையும் ரசிகர்கள் குறிப்பிடாமல் இல்லை.
Also Read | "இது தான் சரியான நேரம்"... திடீர்ன்னு ஆஸ்திரேலியா கேப்டன் எடுத்த முடிவு.. கலங்கிய ரசிகர்கள்!!

மற்ற செய்திகள்
