"DIVORCE ஆகி 4 ஆண்டுகள்".. சுதந்திரம் கிடைத்த நாளாக கொண்டாடிய பெண்.. வைரல் பதிவு!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅவ்வப்போது இணையத்தில் நம்மைச் சுற்றி நடக்கும் ஏராளமான விஷயங்கள் குறித்த செய்திகள் பெரிய அளவில் வைரல் ஆவதை நாம் கவனித்திருப்போம்.

இப்படி வைரலாகும் விஷயங்கள் வழக்கத்திற்கு மாறாக சற்று வினோதமாகவோ அல்லது மனதை நெகிழ வைக்க கூடிய வகையிலோ அல்லது அதிர்ச்சி கலந்திருக்கும் போதோ அது பெரிய அளவில் பலர் கவனத்தையும் பெற்று பேசு பொருளாகவும் மாறும்.
அந்த வகையிலான ஒரு சம்பவம் குறித்து பதிவு தான் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி பலர் கவனத்தையும் பெற்று வருகிறது.
சாஸ்வதி சிவா என்ற பெண் ஒருவர் பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவருக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாக விவாகரத்து ஆனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் தற்போது அவருக்கு நான்காண்டுகள் விவாகரத்து ஆனதை கொண்டாடவும் செய்துள்ளார்.
சாஸ்வதி பகிர்ந்துள்ள லிங்க்டு இன் பதிவில் கடந்த நான்கு ஆண்டுகளாக, பல்வேறு இன்ட்ரஸ்டிங்கான விஷயங்களை செய்வதற்கான வாய்ப்பு தனக்கு கிடைத்ததாகவும் இப்படி ஒரு விஷயத்தை தனது வாழ்வில் எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் திட்டமிடப்படாத பல்வேறு விஷயங்கள் பெரும்பாலும் அழகான முடிவுகளை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார் சாஸ்வதி.
தனது தொழிலில் திறம்பட செயல்பட்டு வரும் சாஸ்வதி, தனது மன அழுத்தத்தை பார்த்துக் கொள்வதற்காக Therapy உள்ளிட்ட விஷயங்களையும் கையாண்டு வருவதை பற்றியும் தனது பதிவில் கருத்து பகிர்ந்துள்ளார். அதே போல விவாகரத்தான பின் தனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்தும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ள சாஸ்வதி, தனக்கு விவாகரத்து கிடைத்த நாளை கடந்த நான்கு ஆண்டுகளாக தனக்கு சுதந்திரம் கிடைத்த நாள் என்றும் கருதி கொண்டாடி வருகிறார்.
விவாகரத்தான நாளை சுதந்திர நாளாக கொண்டாடி வரும் பெண் குறித்த பதிவு தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிக வைரலாகி வருவதுடன் பலரும் பலவிதமான கருத்துகளையும் இதன் கீழ் குறிப்பிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
