பிறந்தநாள் GIFTனு ஆசையா பிரிச்சு பார்த்தா.. இப்படி பங்கம் பண்ணிட்டீங்களே..😅 வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தனது மனைவியின் பிறந்தநாளுக்கு கணவர் வித்தியாசமான பரிசு ஒன்றை கொடுக்கும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.
சமீப காலங்களில் திருமண தம்பதிகளின் நகைச்சுவை வீடியோக்கள் சமூக வலைத் தளங்களில் அதிகம் வரவேற்பை பெற்று வருகின்றன. தங்களுடைய வாழ்க்கை பயணம் குறித்தும் அன்றாட வாழ்க்கையில் தங்கள் சந்திக்கும் சம்பவங்கள் குறித்தும் நகைச்சுவையுடன் இவர்கள் பதிவு செய்யும் வீடியோக்கள் பெரும்பாலான மக்களை கவர்ந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் சமீபத்தில் தனது மனைவியின் பிறந்த நாளுக்கு கணவர் பரிசளிப்பது போன்ற வீடியோ நெட்டிசன்களை வெடித்துச் சிரிக்க வைத்திருக்கிறது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த வீடியோவில் இளம்பெண் ஒருவர் கண்ணாடி முன் நின்று அலங்காரம் செய்து கொண்டிருக்க, அப்போது அவருடைய கணவர் கையில் ஒரு பையுடன் உள்ளே நுழைகிறார். அந்த பெண்ணிடம் பிறந்த நாள் பரிசு எனக் கூறி அந்தப் பையை நீட்டுகிறார் கணவர். ஆச்சரியப்பட்டவராக திரும்பி பார்க்கும் அந்த பெண் ஆர்வத்துடன் அந்தப் பையை வாங்கி உள்ளே பார்க்கிறார்.
அதன் பின்னர் உள்ளே இருந்த பொருட்களை வெளியே எடுத்து அதனுள் இருந்த இன்னொரு கவரை பிரிக்கிறார். அதற்குள்ளே என்ன இருக்கிறது? என்று ஆர்வத்துடன் அவர் அந்த கவரை பிரித்துப் பார்க்கும்போது உள்ளே காம்ப்ளான் பாட்டில் இருப்பதை பார்த்து அவர் கொஞ்சம் ஷாக் ஆகிப்போகிறார்.
Images are subject to © copyright to their respective owners.
பின்னர் புன்னகைத்தபடியே தனது கணவரின் மீது அந்த பாட்டிலை வீச முற்படுகிறார் அந்த மனைவி. அதாவது தனது மனைவி உயரம் குறைவாக இருப்பதை தைரியமாக கிண்டல் அடிக்க முயற்சித்துள்ளார் அந்த கணவர். பரிசை கொடுக்கும்போதும்,"வாழ்க்கையில நீ மேலும் மேலும் பல உயரத்துக்கு போறதுக்கு என்னால முடிஞ்ச ஒரு உதவி" என சொல்கிறார் அவர். அப்போ புரியல, ஆனா இப்போ புரியுது என்ற மொமெண்ட்டில் பரிசை பார்த்ததும் அப்பெண்மணி ரியாக்ஷன் கொடுக்கும் இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மற்ற செய்திகள்
