"இவங்க நம்பர் அனுப்புங்க".. ஒரே வீடியோவில் ட்ரெண்டான பெண்.. உதவி செய்ய காத்திருக்கும் நடிகர் சோனு சூட்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Jan 30, 2023 10:51 AM

தனது மகளுக்காக உருக்கமாக பாடிய பெண்மணிக்கு உதவி செய்ய முன்வந்திருக்கிறார் நடிகர் சோனு சூட். இந்நிலையில் அந்த பெண்மணி பாடும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Sonu Sood Offers help To Woman after her video viral

Also Read | உணவால் இறந்ததாக கருதிய உறவினர்கள்.. ஒரு மாதம் கழித்து விலகிய மர்மம்.. கண்ணீர் மல்க கதறிய கணவர்!!

பஞ்சாப் மாநிலத்தில் 1973 ஆம் ஆண்டு பிறந்த சோனு சூட், பொறியியல் படித்துவிட்டு மாடலிங் துறைக்குள் கால்பதித்தார். 1999-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான "கள்ளழகர்" என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து திரைத்துறையில் நடிகராக சோனு சூட் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து நெஞ்சினிலே, அருந்ததி, சந்திரமுகி ஆகிய படங்களின் மூலமாக மக்களிடையே பிரபலமானார்.

கொரோனா சமயத்தில், பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளிகள் சொந்த ஊர் திரும்ப இலவச விமான பயணத்தை இவர் ஏற்பாடு செய்துகொடுத்தார். இதன்மூலம் நாடே சோனு சூட்டை பாராட்டியது. மேலும், உதவி வேண்டி பொதுமக்கள் சமூக வலை தளங்கள் வாயிலாக கோரிக்கை வைத்தாலும் சோனு சூட் தொடர்ந்து அவர்களுக்கு உதவுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

Sonu Sood Offers help To Woman after her video viral

இந்நிலையில், பெண் ஒருவர் பாடும் வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை முகேஷ் குமார் சின்ஹா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில், ஒரு பெண்மணி தனது மகளுக்காக மெஹ்பூபா படத்தில் வரும் Mere Naina Sawan Bhado எனும் லதா மங்கேஷ்கர் பாடிய பாடலை உணர்ச்சிப்பூர்வமாக பாடுகிறார். சப்பாத்திகளை உருவாக்கும் இடையில் அசாதாரணமாக பாடும் இந்த பெண்மணியின் குரல் நெட்டிசன்களை நெக்குருக செய்திருக்கிறது.

Sonu Sood Offers help To Woman after her video viral

இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவரும் நிலையில் நடிகர் சோனு சூட் இந்த பதிவில் கமெண்ட் செய்திருக்கிறார். அதில் இந்த பெண்மணியின் போன் நம்பர் இருந்தால் அனுப்புங்கள் எனவும் இந்த தாய் திரைப்படத்தில் பாடுவார் எனவும் கமெண்ட் செய்திருக்கிறார். இதனையடுத்து பெண்மணியின் அட்டகாசமான குரலை வியந்து வரும் நெட்டிசன்கள், சோனு சூட்டின் உதவும் குணத்தையும் பாராட்டி வருகின்றனர். இதனிடையே இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Also Read | T20 : ஒரு BALL -ல கூட இது நடக்கலயே..!!.. INDvNZ போட்டியில் நடந்த வினோதம்.. Trending

Tags : #SONU SOOD #WOMAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sonu Sood Offers help To Woman after her video viral | India News.