2 மாதங்களில் '2வது' முறையாக... 'சிலிண்டர்' விலை 'குறைப்பு'... 'சென்னையில்' எவ்வளவு?... 'விவரங்கள்' உள்ளே...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Apr 01, 2020 01:40 PM

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ 65 குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai LPG Gas Cylinder Prices Reduced By Rs 65 Rates Inside

கொரோனா பாதிப்பால் தொழில்கள் முடங்கியுள்ளதால் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாக உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதையடுத்து கடந்த 2 மாதங்களில் 2வது முறையாக மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ 64.50 குறைக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் ரூ 826 ஆக விற்கப்பட்டு வந்த சிலிண்டர் இன்று முதல் ரூ 761.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் விலை குறைப்புக்கு பின் சமையல் எரிவாயு சிலிண்டர் டெல்லியில் ரூ 744க்கும், மும்பையில் ரூ 714.50 க்கும், கொல்கத்தாவில் ரூ 774.50க்கும்  விற்பனை செய்யப்படுகிறது.

Tags : #LPG