'நான் செத்து போயிடுவேன்னு நெனச்சேன், ஆனால்...' 'தயவுசெய்து எல்லாரும் வீட்டுக்குள்ளையே இருங்க...' கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவரின் வேண்டுகோள்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Apr 01, 2020 08:50 AM

அமெரிக்காவில் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சை எடுத்து வரும் 22 வயது இளம்பெண் தனக்கு ஏற்பட்ட நோயின் தீவிரத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Experiences of adolescent girl infected with coronavirus

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உஹான் மாகாணத்தில் பரவிய கொரோனா வைரஸ் இன்றளவும் தனது குரூர தாக்குதலை கட்டுப்படுத்தாமல் உலக நாடுகளுக்கு மிக விரைவாக பரவிவருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் உருவாகிய சீனாவை காட்டிலும் அமெரிக்க தான் இதுவரை அதிகம் பாதித்த எண்ணிக்கையை கொண்டுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை 188,530 பாதிப்படைந்துள்ள நிலையில் 3,889 உயிரிழந்துள்ளனர். மேலும் 7,251 சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த 22 வயது உடைய ஆமி ஷிர்செல் பெண். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய கொரோனா வைரஸ் பாதித்த நாட்களை பற்றி எடுத்து சொல்லி,  நீங்கள் வீட்டில் தனிமையில் இருக்கும் முடிவுக்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆமி தன்னுடைய விடுமுறை நாட்களை கழிக்க ஐரோப்பாவிற்கு சென்று திரும்பியுள்ளார். முதல் இரண்டு நாட்கள் தனக்கு காய்ச்சல், சளி, தலைவலி இருப்பதால் தன்னுடைய மன திருப்பிதிக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்துகொண்டதாக கூறியுள்ளார். பரிசோதனை முடிவுகள் தாமதமாக வரும் என தெரிவித்திருந்தனர்.

மூன்றாம் நாள் தன்னுடைய தலையை கூட குனித்து கீழே இருக்கும் எதையும் பார்க்கமுடியவில்லை எனவும், தொடர் வாந்தி ஏற்பட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து 4 ஆம் நாள் பரிசோதனையின் முடிவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் மூச்சு விடுவது மிகவும் சிரமமாக இருந்தது எனவும் 102 டிகிரி காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. 5 ஆம் நாள் நான் இறந்து விடுவேன் என்று எண்ணும் அளவுக்கு மிகமோசமான நிலையில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

6 ஆம் நாள் என்னால் சமாளிக்க முடியாததால் அவசர உதவி எண்ணை அழைத்தேன். அவர்கள் என்னை ஆம்புலன்சில் ஏற்றி சென்றார்கள். அதன் பின் 7 முதல் 11 நாட்கள் இதே மாதிரியான அறிகுறி தொடர்ந்தது. நாள் முழுவதும் படுக்கையில் இருந்தேன். உடல் நடுங்கியது, வியர்வை வழிந்து கொண்டிருந்தது சாப்பிட கூட முடியவில்லை. மிகவும் கவலைக்கிடமாக உணர்ந்தேன். 12 ஆம் நாளான இன்றும் இந்த அறிகுறிகளுடன் தான் இருக்கிறேன். ஆனால் இப்போது எனக்கு பசிக்கிறது. இது மட்டும் தான் ஆறுதல்.

இம்மாதிரியான அனுபவம் எனக்கு இதுவே முதல் முறை. மிக மோசமான அனுபவம். கொரோனா வைரஸை நான் எதிரியாக பார்க்கிறேன். மனித நேயமற்ற உயிரி. அதை யாரும் விரும்பமாட்டார்கள்.

என்னுடைய இந்த மிக மோசமான அனுபவங்களை உங்களுக்கு பகிர்வதற்கு காரணம் நீங்களும் என்னைப்போல் இம்மாதிரியான அனுபவங்களை பெற கூடாது என்பதற்காக தான். கொரோனா வைரஸின் இந்த கோரப்பிடியிலிருந்து தப்பிக்க நீங்கள் உங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஆமி.

 

Tags : #CORONAVIRUS