‘ரூம் போட்டு யோசிப்பாங்களோ’!.. EX-BOYFRIEND-யை ‘பழி’ வாங்க இளம்பெண் போட்ட ப்ளான்.. மிரண்டுபோய் நின்ற இளைஞர்..!
முகப்பு > செய்திகள் > உலகம்முன்னாள் காதலனை பழி வாங்க டெலிவரி மேனை வைத்து இளம்பெண் செய்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவின் ShangDong நகரத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னை ஏமாற்றிய முன்னாள் காதலனை பழி வாங்க நினைத்துள்ளார். அதனால் ஒரு டீ-யை ஆன்லைனில் ஆர்டர் செய்து அதை தனது முன்னாள் காதலின் முகத்தில் ஊற்ற வேண்டும் என ஆர்டரில் குறிப்பிட்டுள்ளார். இளம்பெண் குறிப்பிட்டது போலவே டீ-யை எடுத்து வந்த டெலிவரி மேன் அந்த இளைஞரின் முகத்தில் ஊற்றினார்.
சிறிது நேரம் என்ன நடக்கிறது என தெரியாமல் விழித்த இளைஞரிடம் ஒரு சீட்டை டெலிவரி மேன் கொடுத்துள்ளார். அதில், தங்களது முன்னாள் காதலி இதை செய்ய சொல்லி குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து தான் செய்த செயல் தவறு என்பதை உணர்ந்த டெலிவரி மேன், அந்த இளைஞரிடம் மன்னிப்பு கேட்டு, முகத்தில் கொட்டிய டீ-யை துடைப்பதற்கு துணி கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
