‘இது அவ்வளவு ஈசி இல்ல’!.. இளம்பெண்ணின் கையில் இருந்த ‘டாட்டூ’.. பாலியல் வன்புணர்வு வழக்கில் நீதிபதி அதிரடி உத்தரவு..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுக்கு ஆளான நபரின் பெயரை, வழக்கு தொடுத்த பெண் கையில் டாட்டூ குத்தியிருந்ததால் அந்த நபருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

இளம்பெண் ஒருவர், தனக்கு அறிமுகமான நபர் ஒருவர் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், அந்த நபர் தன்னை மிரட்டியும், வற்புறுத்தியும் பலமுறை பாலியல் வன்புணர்வு செய்ததாக குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த இன்னலை கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தான் சந்தித்ததாக அப்பெண் குற்றம் சாட்டியிருந்தார்.
இதுகுறித்து தெரிவித்த குற்றம் சாட்டப்பட்ட நபர், தாங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும், ஒருமித்த உறவில் இருவரும் இருந்த நிலையில், திடீரென ஏற்பட்ட பிரச்சனையை அடுத்து அப்பெண் தன் மீது காவல்நிலையத்தில் பாலியல் வன்புணர்வு புகார் அளித்ததாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கு ஆதரமாக குற்றம் சுமத்திய பெண்ணின் கையில் தனது பெயர் டாட்டூ குத்தப்பட்டுள்ள புகைப்பட ஆதாரத்தை காட்டினார். மேலும் இருவரும் மாலை மாற்றிக்கொண்ட புகைப்படங்கள், செல்ஃபிகள், நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நீதிமன்றத்தில் ஆதராமாக சமர்பித்தார். பேஸ்புக்கில் அப்பெண் friend request கோரியது உள்ளிட்டவற்றை நீதிபதியிடம் அந்த நபர் சமர்பித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரஜ்னீஷ் பாத்நகர் (Rajnish Bhatnagar), ‘குற்றம்சாட்டப்பட்ட நபரின் பெயரை அப்பெண் தனது கையில் டாட்டூ குத்தியுள்ளார். டாட்டூ குத்துவது என்பது அத்தனை எளிதல்ல. என் கருத்துப்படி டாட்டு குத்துவது ஒரு கலை, அதற்காக விஷேசமான இயந்திரம் தேவைப்படும். பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணிண் கையில் அவர் குற்றம் சுமத்தியவரின் பெயர் டாட்டூ குத்தப்பட்டுள்ளது. சிறிது எதிர்ப்பு தெரிவித்தாலும் இந்த வகையில் இப்படி டாட்டூ குத்தியிருக்க முடியாது’ என கூறிய அவர், குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

மற்ற செய்திகள்
